சென்னை: சென்னை அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளான மைசூரு - தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் இன்று (அக்.12) காலை 4.45 மணியளவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் கும்மிடிபூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இரண்டு பெட்டிகள்...
சென்னை: கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்தது.
வெள்ளிக்கிழமை (அக்.11) இரவு 8.27 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மீட்பு பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும்...
காரைக்கால்: கோயில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காரைக்கால் துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் போலீஸில் புகார் அளித்தார். மேலும், வருவாய்த் துறை சார்பில் யாருக்கும் மனைப் பட்டா வழங்கவில்லை என்றும், இதுதொடர்பாக மக்கள் யாரிடமும் பணம் தர வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறி யிருப்பதாகவும், அரசு...
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி (72), பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலை மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்.
அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. சில பரிசோதனைகள் செய்த பின், மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார். வழக்கமான பரிசோதனைக்காக ஆளுநர்...
அறத்துடன் கூடிய தொழிலுக்கு அளவுகோலாக திகழ்ந்தவர்: ரத்தன் டாடா மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
admin - 0
சென்னை: தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: மிகச்சிறந்த தேசியவாதியும், ஒப்பற்ற தொழிலதிபரும், எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த மனிதருமான ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது மறைவு ஒரு மிகப்பெரிய தேசிய இழப்பு.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ரத்தன் டாடாவின் தொலைநோக்கு மிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு அறத்துடன்...
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனருமான முரசொலி செல்வம் பெங்களூரில் நேற்று காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்’ என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிவர் முரசொலி செல்வம் (82). இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சகோதரி மகனும், மறைந்த...
4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் டிஆர்பி தேர்வு மூலம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
admin - 0
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன், துறையின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்...
சென்னை: தமிழகத்தில் இன்று திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு அரபிக் கடலில் கர்நாடகா– கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. இது,...
உதகை: உதகையில் உள்ள ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மரபைப் போற்றுவதாகவும், உதகையின் அடையாளமாகவும் திகழ்கிறது.
இதுகுறித்து நீலகிரி ஆவணக்காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறியதாவது: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் தாத்தா சர் ரத்தன் டாடா. அவர் டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் 2-வது மகன்.சர் ரத்தன்ஜி கலையின் ஆர்வலராகவும், தானத்தில் சிறந்தவராகவும் இருந்தார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நிறைய பேருக்கு தாராளமாக நன்கொடை...
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கான ஆதாரம் எதுவுமில்லை: ஹெச்.ராஜா கருத்து
admin - 0
விழுப்புரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
விழுப்புரத்தில் உள்ள பாஜகஅலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஹரியனா, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களின் பொய்பிரசாரங்களையும் மீறி, அம்மாநிலமக்கள் சிந்தித்து வாக்களித்துள்ளனர். ஹரியானாவில் தேசியஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து, பிரதமரின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்...










