“விஜய் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் தனது வர்ணத்தை காட்டுகிறார்” – எச்.ராஜா விமர்சனம்
admin - 0
ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, லண்டனிலிருந்தாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும் என தீர்மானம் போட்டவர்களை விஜய் தாங்கிப் பிடிப்பார் என்றால், எவ்வளவு பெரிய தேசவிரோத கும்பலை பின்பற்றுகிறார் என்பது மக்களுக்கு தெரியட்டும் என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு...
கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று இன்று (அக்..24) வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் பொள்ளாச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.நடத்துநராக பொள்ளாச்சியை சேர்ந்த கதிரேசன் என்பவர் பணியில் இருந்தார். இப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இப்பேருந்து காலை 8 மணியளவில் மயிலேறிபாளையத்தை கடந்து ஒத்தகால் மண்டபம் பாலம் நோக்கி வந்த...
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 13 இடங்களில் சோதனை: அமலாக்க துறை நடவடிக்கை
admin - 0
அதிமுக ஆட்சிக் காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆர்.வைத்திலிங்கம், ஸ்ரீராம்...
உதவி தொகையை உயர்த்த கோரி மாற்றுத் திறனாளிகள் தர்ணா: முதல்வரை வலியுறுத்துவோம் என செல்வப்பெருந்தகை உறுதி
admin - 0
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சென்னையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநிலப் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் தலைமை...
ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கிய பெண் டிஐஜி, ஏடிஎஸ்பி உட்பட சிறைத்துறை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலைகளை செய்வதற்காக வேலூர்...
100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்
admin - 0
பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 234 நகரங்களில் 730 தனியார் பண்பலை (எப்எம்) வானொலி சேவை தொடங்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் தனியார் எப்எம் வானொலி சேவைக்கு...
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகின்றன. இப்பொருட்கள் விழாக் காலத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு, கார வகைதின்பண்டங்கள் அடங்கிய ‘மதி தீபாவளி பரிசு பெட்டகம்’ தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த பரிசு பெட்டகத்தில் இனிப்பு,கார வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தீபாவளி பண்டிகைக்கு பரிசளிக்கும் வகையில் அலங்கார பரிசு...
கடவுள் அருள் இல்லாததால்தான் சசிகலாவால் முதல்வராக முடியவில்லை: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
admin - 0
கடவுள் அருள் இல்லாததால்தான் சசிகலாவால் தமிழகத்தின் முதல்வராக முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்துவிடமுடியாது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர்...
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அக்.29-ல் தொடக்கம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இன்று ஆலோசனை
admin - 0
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆலோசனை நடத்துகிறார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில்...
சென்னை: தமிழகத்தில் கைம்பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி சிறப்பாக நடைமுறைப்படுத்துவதுடன், தேவையான நிதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
‘இந்து தமிழ் திசை' நாளிதழின் தலையங்க பக்கத்தில் கடந்த அக்.22-ம் தேதி ‘கைம்பெண்களின் கண்ணீரைத் துடைப்பது எப்போது?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. இக்கட்டுரை தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், பல்லாயிரக்கணக்கான பெண்கள் அதிலும் கைம்பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்....










