கோவை விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழ்நாடு விருப்பத்...
ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்கும் வகையில், தடையின்மை சான்று வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒற்றைச் சாளர திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் உத்தேச தடையின்மை சான்று வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா வெளியட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வணிகத்தை எளிதாக மேற்கொள்ளும் வகையிலும், தமிழக அரசால் ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி...
உயர் நீதிமன்றத்தில் புதிதாக மேலும் 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராகி வாதிட தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மாநில அரசு ப்ளீடர் மற்றும் சிறப்பு வழக்கறிஞர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் 2 பேரை புதிதாக கூடுதல்...
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் குழாய் குடிநீர் விநியோகம் ஒருநாள் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
admin - 0
கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக மாற்றப்படுவதால், விஜிபி வளாகம் எதிரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை 24 மணி நேரம் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்...
வடசென்னையில் ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்த அரசு திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
admin - 0
கொளத்தூரில் திறக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் போல வடசென்னையில் ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் அமைக்கவுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் உள்ள முழுநேரம் மற்றும் பகுதிநேர கிளை நூலகங்களை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம்...
குழந்தை தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்: மருத்துவ கவுன்சில் நோட்டீஸுக்கு பெண் மருத்துவர் விளக்கம்
admin - 0
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் தமிழக மருத்துவ கவுன்சில் அனுப்பிய நோட்டீஸுக்கு பெண் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த யூடியூபரான இர்பான் - ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிரசவ சிகிச்சையின்போது அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த இர்பான், அங்கிருந்த மருத்துவரின் அனுமதியுடன் தாய் மற்றும் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டினார்.
இதுதொடர்பான விடியோவை தனது யூடியூப் பக்கத்தில்...
போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமித்தால்தான் மகப்பேறு இறப்பு குறையும்: அரசு மருத்துவர் சட்டப் போராட்ட குழு வலியுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் மகப்பேறு இறப்பை குறைக்க போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியிமிக்காமல், 'வார் ரூமை' மட்டும் அமைப்பது தீர்வாகாது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டுள்ளார். துறையில் உள்ள அடிப்படை தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வை ஏற்படுத்தாமல் மாற்றம் காண முடியாது.
குறிப்பாக,...
திருவொற்றியூர் பள்ளி வாயு கசிவில் விலகாத மர்மம்: வல்லுநர்களின் உதவியை நாட அதிகாரிகள் திட்டம்
admin - 0
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவுக்கான காரணம் புலப்படாததால் பல்துறை வல்லுநர்களின் உதவியை நாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியில் இயங்கும் விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் கடந்த அக்.25-ம் தேதி திடீரென பரவிய வாயு நெடி காரணமாக 39 மாணவிகள் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் முகமை மற்றும் மாசுக்...
தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அழைப்பு
admin - 0
முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம்தேதி சுதந்திர தினவிழா உரையில்,“பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர்மருந்தகங்கள் தொடங்கப்படும்“ என்று அறிவித்தார். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த அக். 29-ம்தேதி...
தஞ்சாவூருக்கு 7-ம் தேதி வரும் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடுவதா? – ஹெச்.ராஜா கேள்வி
admin - 0
தஞ்சாவூர் செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து கோயில்களின் நிதியில் இருந்தும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுவதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உதயநிதி ஸ்டாலினை பழநி முருகன் மாநாட்டில் பேச வைத்தனர். ‘‘இது ஆன்மிக மாநாடு அல்ல’’ என்று அவர் பேசுகிறார். அப்படியென்றால், அதற்கு ஏன்கோயில் நிதியை செலவு செய்தனர். கோயில் நிதியை...










