‘வேளச்சேரி-பரங்கிமலை இடையே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்கப்படும்’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கடந்த 1985-ம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, முதற்கட்டமாக 1997-ம் ஆண்டு சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே 9 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே ரூ.877 கோடி செலவில்...
அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர் மன்மோகன் சிங்: ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
admin - 0
இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் மன்மோகன் சிங் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: பணிவு மற்றும் நேர்மையின் உருவமாக விளங்கியவர் மன்மோகன் சிங். இந்தியா பொருளாதாரத்தின் சவாலான காலகட்டத்தில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியவர். அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
துணை முதல்வர் உதயநிதி: இந்திய பொருளாதாரத்தை மன்மோகன் சிங்கின் காலகட்டத்துக்கு முன் - பின் என குறிப்பிடும்படியாக மாற்றியமைத்தவர். அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு.
அதிமுக...
நெமிலி அருகே விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
admin - 0
நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நேற்று அறிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (34).
இவர், சென்னை தலைமை செயலகத்தில் உள்வட்ட பாதுகாப்பு வாகன பிரிவு அணியில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்மிதா (27). தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளன. செந்தில்வேல் தனது வீட்டிலிருந்து இரு...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஞானசேகரன் என்பவர் அத்துமீறி நுழைந்து, மாணவர் ஒருவரை அடித்து உதைத்துவிட்டு உடன் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதை செல்போனிலும் படம் எடுத்துள்ளார்.
அப்போது அவர் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார்...
மாணவி பாலியல் துன்புறுத்தல்: பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு புகார் வரவில்லை – அமைச்சர் கோவி.செழியன்
admin - 0
அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த அசம்பாவித சம்பவம் தொடர்பாக 25-ம் தேதி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. புகார் மனு பெற்ற குறுகிய காலத்திலேயே அந்த நபர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக போஷ் கமிட்டிக்கு (பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழு) புகார் வரவில்லை. அதேநேரத்தில்...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வட தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும்...
‘தவெகவுடன் கூட்டணி குறித்து இப்போதே எதுவும் சொல்ல முடியாது’ என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர் படிவங்களை வழங்கினர். இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம்,...
‘திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறேன்’ என அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், தந்தை பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கசிய விட்டதற்கு திமுகவினர் வெட்கப்பட வேண்டும். அண்ணாமலை மீண்டும்...
முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: காவல்துறையின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது. மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை செய்தால், காவல்துறையோ மனரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகளில் எத்தகைய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற...
குமரி முனையில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா: ரூ.37 கோடியில் கண்ணாடி இழை பாலத்தை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
admin - 0
குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, ரூ.37 கோடியில் வள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையிலான கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிச.30-ம் தேதி திறந்து வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கடந்த 2000-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, வரும் டிச.30 முதல் ஜன.1-ம்...










