Google search engine
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, இந்திய மொழிகளுக்கான மொழி சமத்துவ உரிமை இயக்கத்தின் அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் நாட்டில் நிர்வாக மொழிகளாக இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. ஆனால், அதை கல்வித் துறையில் கண்மூடித்தனமாக நீட்டித்துக்கொள்ள முடியாது என்பதுதான் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதமாகும். இந்தியா பன்மொழித்துவத்தை நோக்கி நகர்வதற்கு பதிலாக, இன்றைய ஆட்சியாளர்களால்...
“தமிழ் மொழி போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி.” என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக தாய்மொழிகள் தினம் இன்று (பிப்.21) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும்...
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க் ஆட்டோ' திட்டம் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சமூகநலத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஆட்டோ வாங்குவதற்காக அரசு மானியமாக தலா ரூ.1 லட்சம் வீதம் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 250 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது....
‘‘சிறைகள் தண்டனைக்குரிய இடமாக அரசு பார்ப்பதில்லை. அது ஒரு சீர்த்திருத்தத்துக்கான இடமாக பார்க்கிறது’’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில், கடந்த ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டு, சமூக வாழ்க்கைக்குத் திரும்பிய 750 முன்னாள் சிறைவாசிகள் சுயதொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 75 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று...
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் மின்சார ரயில் வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 25 மதிக்கத்தக்க பெண், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு குடிபோதையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சத்தியபாலு என்பவரை மாம்பலம் ரயில்வே போலீஸார் கைது செய்து,...
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உட்பட 18 மாவட்டங்களின் விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 5 லட்சத்து 18,783 விவசாயிகள் பயன்பெறுவர். இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர்...
திருச்சிராப்பள்ளி, மதுரையில் ரூ.717 கோடியில் 12 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை விரைவில்...
தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கடிதத்தில் முதல்வர் தெரிவித்திருப்பதாவது: கடந்த ஜன.31-ம் தேதியிட்ட தங்களின் கடிதத்தில், திறன்மிகு குழந்தைகள் மையம் (Mission Saksham Anganwadi & POSHAN 2.0), மகளிர் சக்தி...
வேலை தேடி திருப்பூருக்கு குடும்பத்துடன் ரயிலில் வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிஹாரைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 17-ம் தேதி திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை தேடி ஒடிசா மாநிலத்தில் இருந்து 27 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் ரயிலில் திருப்பூர் வந்தார். திருப்பூரில் வேலை தேடி அலைந்துள்ளனர். ஆனால் எங்குமே...
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பதியில் நடைபெற்று வரும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவித்தார். திருப்பதி ஆஷா அரங்கில் ‘டெம்பிள் கனெக்ட்’ நிறுவனம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு...