நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை போலீஸார் அமல்படுத்தாதது ஏன்? – கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ஆஜராக உத்தரவு
admin - 0
நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள வடிவேல் என்பவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம்,...
வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை சென்னையில் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் தங்கள் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.
அதன்படி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்வானது தற்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே...
பொறியியல் படிப்புக்கான இணைப்பு அங்கீகார விதிமுறைகள்: கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை
admin - 0
பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும்போது போதுமான தகவல்களை தெரிவிக்காவிட்டால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் தங்கள் இணைப்பு அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னரே பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும். இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.
இதை முறையாக பின்பற்றும் கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்....
கடல் ஆமை இறப்புக்கான காரணம் உடற்கூராய்வுக்கு பிறகே தெரியும்: பசுமை தீர்ப்பாயத்தில் அரசு விளக்கம்
admin - 0
கடல் ஆமை இறப்புக்கான காரணம் உடற்கூராய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவொற்றியூர் முதல் கோவளம் வரை கடற்கரையோரங்களில் கடந்த வாரம் ஏராளமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இவற்றின் திடீர் இறப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆமைகள் இறப்பு தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில்...
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெருங்களத்தூரில் ஜன. 29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு
admin - 0
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் பெருங்களத்தூரில் ஜன.29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சி, 5-வது மண்டலம் பெருங்களத்தூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
அதிமுக ஆட்சியில் ரூ.14 கோடியில் சீரமைக்கப்பட்ட பீர்க்கன்காரணை ஏரி, திமுக...
பட்டறை தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக காவல்துறையின் அலட்சியப்போக்கு காரணமாக, சென்னை ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு ராஜன் என்கிற பட்டறை தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
ராஜன் உயிரிழப்பு குறித்து அவரது உறவினர்கள் கூறுவது வேறு விதமாக உள்ளது. அதாவது, கடந்த மாத...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைப்பது மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்துக்காக விரயம் செய்வதாகும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடியில் ‘கருணாநிதி பன்னாட்டு அரங்கம்’ அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க...
‘தமிழகத்தில் இளவயது கர்ப்பம் அதிகரிப்பு’ – போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்
admin - 0
“கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் இளவயது கர்ப்பம் அதிகரித்து இருக்கிறது. விழிப்புணர்வை பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் ஏற்படுத்தி, இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த திமுக அரசு முன் வரவேண்டும்.” என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அளவான குடும்பத்தின் முக்கியத்துவம், பாலின சமத்துவம், பிறப்புகளுக்கிடையே போதிய இடைவெளி, திருமண வயதை உயர்த்துதல், இளவயது கர்ப்பம் ஆகியவை...
அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூல வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி? – சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு
admin - 0
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா நகர் சிறுமி வாக்குமூலம் அளித்த வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி என்பது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்து புகார் அளிக்கச் சென்ற அந்த சிறுமியின் பெற்றோரை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த சென்னை...
யுஜிசி வரைவு; மாநில உரிமைகளுக்காக ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம்: அமைச்சர் கோவி.செழியன்
admin - 0
யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தைத் தொடர்ந்து கேரள அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, மாநில உரிமைகளுக்காக ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.வி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றாக நின்று பேராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து...










