வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்க கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியிருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதுமே, கனிமவளங்கள் கொள்ளைப்போவது தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுகவின் ஆசியுடன், கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்களைக் கடத்தி, கேரளாவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த...
இரும்பு குறித்து பெருமைப்படும் நேரத்தில் இரும்புக்கரம் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
admin - 0
இரும்பை பயன்படுத்தியதில் தமிழகம் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு பட்டப்பெயர் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
புழல் சிறையில் தன்னை தனிமைச்சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் கூறி பல்வேறு குற்றவழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள போலீஸ்...
கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம்
admin - 0
திமுக 1949-ல் தொடங்கினாலும் தேர்தல் களத்துக்கு 1957-ல் தான் வந்தது. ஆனால் சிலர் சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிக்கின்றனர் என தவெக தலைவர் விஜய் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த ஒரு மண்டலச் செயலாளர், 8 மாவட்டச் செயலாளர்கள், 5 ஒன்றிய செயலாளர்கள், 9 சார்பு அணி நிர்வாகிகள், 6 தொகுதி...
இந்தியா – இங்கிலாந்து இடையே சேப்பாக்கத்தில் இன்று டி-20 கிரிக்கெட் போட்டி: 2000 போலீஸார் பாதுகாப்பு
admin - 0
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வர உள்ளனர்.
இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில்...
உருட்டு கட்டைகளுடன் நின்றிருந்த விவகாரம்: சீமான் உட்பட 180 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
admin - 0
தாக்குதல் நடத்தும் நோக்கில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்த விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 180 பேர் மீது நீலாங்கரை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சில தினங்களாக பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சீமானுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 22-ம் தேதி,...
கரோனா பேரிடரில் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை: சட்ட போராட்டக்குழு வலியுறுத்தல்
admin - 0
கரோனா பேரிடரின்போது பணியாற்றி தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் முந்தைய அரசை வலியுறுத்தினார். ஆனால்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 -ம் தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை...
அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: வாக்குமூலம் வெளியானது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு மாற்றம்
admin - 0
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவை உயர் நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், புகார் அளிக்கச் சென்ற அந்த சிறுமியின் பெற்றோரை போலீஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியது.
சிறப்பு...
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேர் மீது கடந்த 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மனுதாரர் தரப்பு மார்ச் 10-ம் தேதிக்குள் பதில் அளி்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பரில் புகார் எழுந்தது. இதுகுறித்து...
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் நடந்த அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதில் வரும் கோடைகாலத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான மின்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக இதுவரை 48 துணை மின்நிலையங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன....










