மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் பிப். 26-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக...
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்: பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு
admin - 0
தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொண்டனர். இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்...
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டம் – முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
admin - 0
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வரும் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்புவிடுத்து 40 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
2025-26-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் மார்ச் 24-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி வேளாண் பட்ஜெட் மற்றும் துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற உள்ளது. இதற்கு சட்டப்பேரவை...
பல ஏக்கர் நிலங்களை பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தும் சூழல்: விவசாய சங்கத் தலைவர் எச்சரிக்கை
admin - 0
பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக் குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் பரந்தூர் வட்டார விவசாயிகள் நிலவுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்று விவசாய சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பேசியது: தமிழக அரசு 2021-ம் ஆண்டு அளித்த வாக்குறுதிப்படி பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் விவசாயிகளின் கருத்துகளை கேட்கவில்லை.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க...
‘சென்னையில் பிறந்த உங்கள் மனைவி சவுமியா தருமபுரியில் போட்டியிடலாம், சென்னையில் வசித்த நான் மயிலாடுதுறையில் போட்டியிடக் கூடாதா?’ என்று அன்புமணி ராமதாஸுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கும்பகோணத்தில் 23-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘இந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத சென்னையிலிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார். தெரியாமல் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தீர்கள்'...
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுபோன்ற திட்டங்களால் வளமான, நலமான தமிழகம் உருவாகும் என்று உறுதிபட தெரிவித்தார்.
தமிழக கூட்டுறவு துறை சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக...
ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம் அடைந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கதீட்ரல் சாலை - கோபாலபுரம் சந்திப்பில், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்ற கார் ஒன்று அதே பகுதியில் `யு' வளைவில் நேற்று காலை திரும்பியபோது, முன்னால் சென்ற ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், ஆட்டோ சாலையில்...
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப்...
ஜெயலலிதாவுடன் நடிக்கும் திட்டம் இருந்தது: போயஸ் இல்லத்தில் நினைவுகளை பகிர்ந்த நடிகர் ரஜினிகாந்த்
admin - 0
ஜெயலலிதாவுடன் நடிக்கும் திட்டம் இருந்தது என அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மரியாதை செலுத்த வந்த நடிகர் ரஜினிகாந்த் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா, அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்று, ஜெயலலிதா...
மலைவாழ் மக்கள் பட்டா பெற முடியாமல் தவிக்கும் நிலை: தமிழக அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
admin - 0
வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துவதால், மலைவாழ் மக்கள் பட்டா பெற முடியாமல் தவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நில உரிமையும், பழங்குடி மக்களின் இனச்சான்று, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பும் கோரி சென்னையில் நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் பேசியதாவது: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல...










