Google search engine
கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், எனவே அந்த செயலியை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கலைத் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு, அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது...
சென்னையில் அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தில் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் செயல்படுவது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம், மதுரவாயல் பகுதியில் மோகன் மதுபான ஆலை நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 248 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கடந்த 1975-ம் ஆண்டு கையகப்படுத்தி உத்தரவிட்டது. இந்த நிலத்தில்...
பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு விருப்​பமனு தாக்​கல் இன்று நடை​பெறுகிறது. தமிழக பாஜக​வில் மாநில தலைவர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் பதவி​களுக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, இவ்​விரு பதவிகளுக்கு போட்​டி​யிடு​பவர்​கள் விருப்​பமனு தாக்​கல் செய்​ய​லாம் என தமிழக பாஜக தேர்​தல் அதி​காரி எம்​.சக்​கர​வர்த்தி அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மாநில தலை​வர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் தேர்​தலுக்​கான விருப்​பமனுக்​களை கட்​சி​யின் இணை​யதள​மான www.bjptn.com...
பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பாமகவினரிடையே உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சாதி வாரி கணக்கெடுப்பு, அரசுப் பள்ளிகளின் மேம்பாடு, ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். 1980-ல் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில்...
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஏப்.7-ம் தேதி சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் சோதனை நடந்தது. இந்நிலையில், அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்...
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து பேசியதாவது: தமிழகம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலமாகும். அதன்படி மொத்தம் 49 நிறுவனங்களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள்...
சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்று, நீட் தேர்வு தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.   நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: நுழைவுத் தேர்வு என்பது ஏழை...
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசும்போது, அந்தியூரில் கலைக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அளித்த பதில்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 2022-23 கல்வியாண்டு முதல் புதிய அரசு கலை மற்றும் அறிவியல்...
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் நாகை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: அகில இந்​திய விவ​சா​யிகள் சங்​க​மா​நாடு வரும் 15, 16, 17-ம் தேதி​களில் நாகை​யில் நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, தமிழக அமைச்​சர்​கள் எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, கேரள மாநில அமைச்​சர்​கள் மற்​றும் பல்​வேறு மாநிலங்​களில் இருந்து முக்​கிய தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர். பாஜக​வின் நிர்​பந்​தம் காரண​மாகவே தமிழக அரசுக்கு எதி​ராக அதி​முக...
சென்னையில் ரூ.1.32 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப்பாவாணர் அரங்கத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிடத்தின் முதல் தளத்தில் தேவநேயப் பாவாணர் அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கம் ரூ.1.32 கோடியில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, 280 இருக்கைகள், லைவ் கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒலி, ஒளி அமைப்புகள் மற்றும் உணவுக்...