சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாகலாந்து மிக குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் நிறைந்த மாநிலமாகவும் உள்ளது. இந்த மாநிலத்தில் முந்தைய காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் இருந்தனர். மோடி பிரதமரான பிறகு போராளிகளுக்கும், அரசுக்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இனி ஆயுதத்தை ஏந்த மாட்டோம் என்று போராளிகள் உறுதியளித்தனர். அதை...
பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
admin - 0
பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்படும் இடமாறுதல்களை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராகப் பணிபுரிந்து வருபவர் ஆர்.சிவகுமார். இவர் 1995 முதல் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், தனக்கு கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கான ஊதியம் தரப்படுவதில்லை. ணிக்குரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதில் சிவகுமாருக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை உச்ச...
கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சுகன்யா கடந்தஆண்டு மே மாதம் அளித்த புகாரில், ‘பெண் காவலர்கள், உயரதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
தொடர்ந்து, பல்வேறு காவல் நிலையங்களில் சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மீது...
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத், அகில இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வுசெய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பாரதிய பாஷா பரிஷத் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது ரூ..1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. கொல்கத்தாவில் மே மாதம் 1-ம்...
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமூக தளங்களில் ஏப்.30 வரை விழிப்புணர்வு போட்டிகள்
admin - 0
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு போட்டிகள் ஏப்.30-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் எக்ஸ், இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ஏப்.30 வரை பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களை...
கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், எனவே அந்த செயலியை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கலைத் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு, அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது...
மதுபான ஆலை நிறுவனத்திடம் இருந்து அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவு
admin - 0
சென்னையில் அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தில் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் செயல்படுவது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம், மதுரவாயல் பகுதியில் மோகன் மதுபான ஆலை நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 248 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கடந்த 1975-ம் ஆண்டு கையகப்படுத்தி உத்தரவிட்டது. இந்த நிலத்தில்...
பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் இன்று நடைபெறுகிறது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவ்விரு பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என தமிழக பாஜக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com...
பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பாமகவினரிடையே உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சாதி வாரி கணக்கெடுப்பு, அரசுப் பள்ளிகளின் மேம்பாடு, ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
1980-ல் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில்...
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஏப்.7-ம் தேதி சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் சோதனை நடந்தது.
இந்நிலையில், அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்...










