Google search engine
பிரதானக் கட்சிகளின் தலைமைகள் எல்லாம் 2026 தேர்தலுக்கான கூட்டணிகளை கட்டமைப்பதில் மும்முரம் காட்டி வரும் நிலையில், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு தோதான தொகுதிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், மதுரை மாவட்​டத்​தி​லுள்ள 10 சட்டமன்றத் தொகுதி​களில் குறைந்​த​பட்சம் ஒரு தொகுதியை கூட்டணித் தலைமை​யிடம் காங்கிரஸ் கேட்டுப் பெறுவது வழக்கம். அதன்படி கடந்த தேர்தலில் மேலூர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்​கியது திமுக. கடந்த...
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா...
தமிழகத்தில் இன்றுமுதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை...
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உட்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், ஓய்வூதியர்களுக்கு அந்த...
திமுக கூட்டணி கட்சிகள் கசப்பான மனநிலையில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கோடையில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில், அதிமுக சார்பில் சென்னை திரு.வி.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், வெள்ளரிக்காய், நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் எனது...
 முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் (92). வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை...
அரசியல் லாப, நஷ்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சார்பு அணிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். மதிமுக 32-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு வைகோ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிமுக தனது அரசியல் பயணத்தில் 31 ஆண்டுகளைக் கடந்து 32-வது ஆண்டில் மே 6-ம் தேதி அடியெடுத்து வைக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து...
தவெக ஆட்சி சிறுவாணி நீரைப்போல தூய்மையானதாக இருக்கும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார். தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான 2-ம் நாள் பயிற்சிப் பட்டறை கோவை எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: தவெக அரசியல் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே எங்களிடம் இடமில்லை. மக்கள் நன்மைக்காக எந்த நிலைக்கும் செல்லத் தயங்க மாட்டோம். ஊழல்...
விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழா அரங்கில், ‘பாரதத்துக்கான வேளாண் கல்வி, புதுமை மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை...
நோயாளி​களின் உடல்​நிலை குறித்த விவரமறிந்​து, சிகிச்சை அளிக்க உதவும் ஆயுஷ்​மான் பாரத் சுகா​தார கணக்கு அடை​யாள அட்​டையை (ஆபா) ஆதார் மூலம் பதிவு செய்​து, பதி​விறக்​கம் செய்​ய​லாம். இதுகுறித்து பொது​மக்​களிடம் மாநில சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டுமென்று வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. தமிழக அரசின் முதல்​வர் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டம், மத்​திய அரசின் பிர​தான் மந்​திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்​டங்​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, ஒரு குடும்​பத்​துக்கு ரூ.5 லட்​சம்...