Google search engine
அடையாறு சீரமைப்பு பணிக்கான அரசின் மறுகுடியமர்வு திட்டத்துக்கு ஆக்கிரமிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடையாறு நதியை சீரமைக்க ரூ.1500 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும். இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத்...
பெரம்பலூர் அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் சித்த மருத்துவரின் கணவர், மகள், தந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்நத 3 பேர் உயிரிழந்தனர். கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரங்குடி அருகே உள்ள தெற்கு கிரிவளை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன் மகன் பாலபிரபு (28). இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவுரி(27). சித்த மருத்துவர். இவர்களுக்கு 2 வயதில் மகள்...
தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் திடீரென புகை வந்ததால், பயணிகள் பதட்டமடைந்தனர். இதற்கிடையில், அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் பின்னால் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ரயில்வே கோட்டத்தில் கடற்கரை - தாம்பரம் வழித்தடம் முக்கியமான உள்ளது. இந்த வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். குறிப்பாக, காலை,...
சென்னையில் தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மாதம் 28-ம் தேதி உச்சிமேடு மேகரையான் தோட்டம் என்ற இடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (63) கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதோடு, அவர்கள் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது. இதே பாணியில் திருப்பூரிலும் கொலை, கொள்ளை...
இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் ‘இந்தியா தர்ம சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழரான சுபாஷ்கரன் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல. இந்தியாவில் தொடர்ந்து தங்க உங்களுக்கு...
மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் 2 நாட்கள் கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாதவரம் ஜி.என்.டி சாலை மற்றும் சந்திரபிரபு காலனி சந்திப்பில் 900 மி.மீ விட்டமுள்ள கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி, 23-ம் தேதி இரவு 10 மணி முதல் 24-ம் தேதி இரவு...
ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 8,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 14 ஆயிரம் கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. கடந்த சில நாட்​களாக காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை​யால் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கர்​நாடகா வனப் பகு​தி​களில் மழை தொடர்​வ​தால் ஒகேனக்​கல்​லுக்கு வரும் தண்​ணீரின் அளவு அடுத்​தடுத்த நாட்​களில் படிப்​படி​யாக அதி​கரிக்​கக் கூடும் என்று நீர்​வளத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதனிடையே, மேட்​டூர் அணைக்​கும் நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது....
நீ்ட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.நீ்ட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: பழனிசாமி: சேலம் சூரமங்கலம் அருகே ஒரு மாணவர், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டது...
ஆயுதங்களுடன் ஊடுருவினாலோ, கொள்ளையில் ஈடுபட்டு தப்பினாலோ குற்றவாளியை சுற்றிவளைத்து கைது செய்வது எப்படி என சென்னையில் போலீஸார், முதன்முறையாக கொள்ளை தடுப்பு ஒத்திகையில் நேற்று ஈடுபட்டனர். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனால், குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் இரு தினங்களுக்கு...
வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மூலம் உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு நடத்தி வருகிறது. ஆனால், இன்று வரையும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்று கூறும் திமுக...