நாம் தமிழர் கட்சி சார்பில் ஆக.17-ம் தேதி மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். 2018-ல் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சீமான் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும்...
காமராஜர் குறித்து சிவா எம்.பி.யின் பேச்சு உண்மைக்கு புறம்பானது: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கருத்து
admin - 0
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசும் போது, முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், உயிர் பிரியும் முன்பு, கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற கூறியதாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில், சிவா எம்.பி.யின் பேச்சுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: முதல்வராக அரசினர் விடுதியில் தங்கியிருந்தபோது...
சென்னை, வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் வரும் 22-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய,...
“வைகோவுக்கு எதிரியாக மாறுவார் துரை வைகோ!” – மதிமுக விவகாரங்களை உடைக்கும் மல்லை சத்யா நேர்காணல்
admin - 0
திமுக-வில் வைகோவை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது அவர் மீது கொலைப்பழி சுமத்தினார் கருணாநிதி. அப்போது அதைச் சொல்லி ஆதங்கப்பட்ட வைகோ, இப்போது மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சுமத்தி அவரை நொறுங்கிப்போக வைத்திருக்கிறார். “இதைவிட, தலைவர் வைகோ விஷத்தைக் கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தாலும் சந்தோசமாக குடித்திருப்பேனே” என மருகிக் கொண்டிருக்கும் மல்லை சத்யாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக...
காமராஜர் குறித்து இழிவான பேச்சு – திருச்சி சிவா, திமுக மன்னிப்பு கேட்க அன்புமணி வலியுறுத்தல்
admin - 0
“காமராஜர் குறித்து இழிவாக பேசியதற்காக திருச்சி சிவாவை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும். திமுக தலைமையும் தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி...
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடங்கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்கள் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. 19 பேரின் நிலங்கள் பரந்தூர் விமான நிலையத்துக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்துக்கான பணிகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து,...
ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல்
admin - 0
மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட கேடயங்களில் திருக்குறளை தவறாக அச்சிடப்பட்டதால் அவற்றை திரும்பப்பெற்று, திருத்தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்துவர் தின விழா நடந்தது. சிறப்பாக சேவையாற்றிய 50 மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேடயங்களை வழங்கி கவுரவித்தார். அந்த கேடயங்களில் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்தது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
கேடயத்தில் இடம் பெற்றிருப்பது திருக்குறளே இல்லை என்று தமிழ்...
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்கவே விஜய்யை பாஜக களமிறக்குகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நடிகர் விஜய்யின் தாயார் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்கவே விஜய்யை பாஜககளமிறக்குகிறது. விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரிசோதனை குறித்து இதுவரை சரியான தகவல்கள் வெளியிடவில்லை.
வருமான வரித்துறை அதிகாரியாக இருந்த அருண்ராஜுக்கு, தவெக கட்சியில் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில்...
காரைக்குடி திமுக மேயர் முத்துத்துரைக்கு எதிராக திமுக துணை மேயரே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்திருப்பதால் சிவகங்கை மாவட்ட திமுக-வும் கிறுகிறுத்துக் கிடக்கிறது.
அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடி மாநகராட்சியில் திமுக-வைச் சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், மாநகர திமுக செயலாளர் குணசேகரன் துணை மேயராகவும் இருக்கிறார்கள். ஏற்கெனவே, சேர்மனாக இருந்த அனுபவம் கொண்டவர் என்பதால் முத்துத்துரை யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ‘கணக்காக’ செய்து...
மகனால் தான் மா.செ பதவியை பறிகொடுத்தாரா கல்யாணசுந்தரம்? – தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சலசலப்பு!
admin - 0
மக்களைத் தேடி கழகத்தினரைப் போகச் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தொல்லையாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கும் வேலைகளையும் வேகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படித்தான் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மாநிலங்களவை எம்பி-யான கல்யாணசுந்தரத்தை கழற்றிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அண்மைக்காலமாக பொது இடங்களில், ‘பொன்முடி ஸ்டைலில்’ எடக்கு மடக்காக பேசி எரிச்சலை உண்டாக்கினார் பெரியவர் கல்யாணசுந்தரம். இது சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையான நிலையில், கல்யாணசுந்தரத்தால் அழுத்திவைக்கப்பட்ட...









