Google search engine
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலை நேற்று, அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இரவுநேரக் கடைகள் இடையூறு இன்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். வணிகர்கள் மீதான காவல் துறை அத்துமீறல்களை தடுக்க வேண்டும். மேலும் வணிகர்கள் மீதான கொலை, கொள்ளை சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். புகையிலைப் பொருட்கள் விற்பனை...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் துரோகி பட்டம் சுமத்தப்பட்ட மல்லை சத்யா, தனது மனக்குமுறலை ‘இந்து தமிழ் திசை’ நேர்காணலில் விரிவாகப் பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார் மதிமுக பொருளாளர் செந்திலதிபன். கண்ணப்பன், எல்ஜி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களைப் போல், தனக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் மல்லை சத்யா சொல்கிறாரே? நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வேளச்சேரி மணிமாறன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் போன்ற...
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை...
காஞ்​சிபுரம் - அரக்​கோணம் நெடுஞ்​சாலை​யில் டேங்​கர் லாரி மீது கார் மோதி​ய​தில்ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் தர்​ம​ராய ரெட்டி தெரு​வைச் சேர்ந்​தவர் வெங்​கடேசன் (48). இவர் வீட்​டிலேயே கார் பழுது பார்க்​கும் பணிமனை நடத்தி வந்​தார். இவரது மனைவி லதா (45). இளைய மகன் தினேஷ்(20). இந்​நிலை​யில், வெங்​கடேசன் நேற்று காலை தனது மனைவி லதா, மகன் தினேஷ் ஆகியோ​ருடன் காரில்...
தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் பகு​திநேர ஆசிரியர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: பணி நிரந்​தரம் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்​தில் 10-வது நாளாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்​கள் காவல் துறை​யின​ரால் வலுக்​கட்​டாய​மாக கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். ஓவி​யம், இசை, உடற்​கல்​வி, கணினி என பல்​வேறு பாடங்​களைப் பயிற்​று​விக்க...
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை மாநகராட்சி 83-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பு முறைகேட்டால் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’...
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை...
பேரிடர் மற்​றும் அவசர காலங்​களில் பொது​மக்​களை மீட்​பது தொடர்பாக சென்னை போலீ​ஸார் நேற்று பிரம்​மாண்ட ஒத்​திகை நடத்​தினர். அவசர காலங்​களில் மக்​களை காப்​ப​தற்​கும், உயிர்​களை மீட்​ப​தற்​காக​வும் சென்னை காவல் துறை​யில் பேரிடர் மீட்​புக் குழு உரு​வாக்​கப்​பட்​டது. 290 போலீ​ஸார் கொண்ட இந்த 16 பேரிடர் மீட்​புக் குழு​வினர் ஆங்​காங்கே தனித்​தனி குழு​வாகப் பிரிந்து சென்று பேரிடர் காலங்​களில் மீட்​புப் பணி​களில் ஈடு​படு​வார்​கள். அதன் முன்​னேற்​பா​டாக காவல்துறை மீட்​புக் குழு​வினர் மீட்​புப்...
மதிமுக-வில் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மனம் திறந்து பேசி இருக்கிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு நேற்று அவரளித்த பேட்டியின் தொடர்ச்சி இது... மக்கள் நலக் கூட்டணி இயல்பாக உருவானதா… வேறு சில காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதா? மக்கள் இயக்கமாக தோன்றி, மக்கள் நலக் கூட்டணியாக அந்த இயக்கம் மாறியது. அதன் நோக்கம் புனிதமானதாக இருந்தாலும், திமுக வெற்றி வாய்ப்பை இழக்கவே இந்தக் கூட்டணி...
தெற்கு ரயில்வே சார்பில் கோவை -பெங்களூரு உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடங்களுக்கு முன் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை -பெங்களூரு உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் ஜூலை 17-ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத டிக்கெட்களை 15 நிமிடங்களுக்கு முன்பு வரை முன்பதிவு இல்லாத...