நீட் தேர்வு முடிவை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
admin - 0
மின்தடை காரணமாக ஆவடி மையத்தி்ல் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆவடி கேந்திரிய வித்யாலயா...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை நேற்றிரவு குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், அடுத்தடுத்த நாளிலே வெயிலும் அதிகரிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரையில் கூட கடும் வெயில் காணப்பட்டது. குறிப்பாக நேற்று மாலை 5.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 100 முதல் 102...
கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது: சீமான், வேல்முருகன் வலியுறுத்தல்
admin - 0
கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கூடாது என சீமான், தி.வேல்முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
‘தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி’ என்று மநீம கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கோரி கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக நீதிமன்றமும், கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இவ்விவகாரத்தில்...
அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் கடந்த டிச.24-ம் தேதி இரவு இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அன்றைய தினம் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம், ஞானசேகரன் செல்போனில் 6 முறை பேசி உள்ளார். அதன்பிறகு, சண்முகமும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து, இன்னொரு காவல்துறை உயர் அதிகாரியிடம் கோட்டூர்...
“எந்த முடிவையும் மாற்றும் அதிகாரம் மருத்துவர் ராமதாஸுக்கு உண்டு!” – வன்னியர் சங்க தலைவர் நேர்காணல்
admin - 0
தந்தை - மகன் யுத்தத்தால் தகித்துக் கிடக்கிறது பாமக. ராமதாஸ் கூட்டும் கூட்டங்களுக்கு போகக்கூடாது என அன்புக் கட்டளை போடுகிறது அன்புமணி தரப்பு. அதனால் தைலாபுரம் தோட்டமே டல்லடித்துக் கிடக்கிறது. அனைத்து அதிகாரமும் தனக்குத் தான் இருப்பதாகச் சொல்கிறார் ராமதாஸ். பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தனக்கே அதிகாரம் என்கிறார் மகன் அன்புமணி. சென்னையில் அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பெருவாரியான மாவட்டச் செயலாளர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள்.
இதற்கு நடுவே, வன்னியர்...
பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும், ராமதாஸ்-அன்புமணி இடையேயான மோதலுக்கும், பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான மோதலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும், பாமகவின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி சார்ந்த பிரச்சனை....
சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி வள்ளுவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். திருச்சி அருகேயுள்ள குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் ரூ.22 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். மேலும், கோயில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார் எழுதிய ‘குணசீல மஹாத்மியம்’, சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய...
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தமும், வேதனையும் அளிப்பதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் திறம்படச் செயல்பட்டவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. நதி நீர் இணைப்பு தொடர்பாக யாரும் சிந்திக்காத காலத்திலேயே தனி நபர் மசோதா கொண்டு வந்தவர்.
1978-ல் இந்தி திணிப்புக்கு...
ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து தலைமைச் செயலர் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்குமாறு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும்...
கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
admin - 0
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் அளிக்கக் கோரி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி சார்பில், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் அளிக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் க.சக்திவேல் பங்கேற்று உரையாற்றும்போது, “அம்பத்தூர் வட்டம், கொரட்டூர்...










