திமுக தொண்டர்களை தேர்தலுக்குத் தயார்படுத்தும் மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் கே.என்.நேருவும் பிரதானமாக இருக்கிறார். அப்படி இருக்கையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே நேரு கோஷ்டி, அன்பில் மகேஸ் கோஷ்டி என இன்னமும் தாமரை இலை தண்ணீராகவே நிற்கிறார்கள் உடன்பிறப்புகள். அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இது அப்பட்டமாகவே தெரிந்தது.
ஒரு காலத்தில் திருச்சி மாவட்ட திமுக என்றால் அது கே.என்.நேருவின் முகமாக மட்டுமே இருந்தது. ஒன்றுபட்ட...
தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் முதல்வர் ஸ்டாலினின் மடைமாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன்...
மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை...
பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நாளை (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: “தியாகத்தையும், பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக்...
'2026 இல் இந்த திமுக அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.' என தவெக சார்பில் சி.டி.ஆர், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் என மாறி மாறி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
கோயம்புத்தூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்த கையோடு 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வையும் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். ஜனநாயகன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்தக்கட்ட திட்டம்...
காலாவதியான, பயன்படுத்தப்படாத மருந்துகளை பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (சிடிஎஸ்சிஓ) வெளியிடப்பட்டுள்ளது. அதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் மருத்துவர் ராஜீவ்சிங் ரகுவன்ஷி அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தரக் குறைபாட்டுக்காக திரும்பப் பெறப்பட்ட மருந்துகள், முறையாக பேக்கிங் செய்யப்படாத...
தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த அடிப்படையில்தான், மக்கள்...
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன் விவகாரம்: அதிமுக, பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி
admin - 0
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை மூலம் குற்றவாளி ஞானசேகரின் செல்போன் அழைப்பு பட்டியலை பெற்று, யார் அந்த ‘சார்’ என்பதை கண்டறிந்து அதிமுக, பாஜக கட்சிகளே வெளியிட வேண்டியது தானே என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகும்கூட...
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
admin - 0
வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார்...
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து எடுத்துரைக்க பயணம் – சென்னை திரும்பிய கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு
admin - 0
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பயணம் மேற்கொண்ட கனிமொழி எம்பி, நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து, தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது.
அதைத்தொடர்ந்து இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளிடம் விளக்குவதற்காக மத்திய அரசு...









