Google search engine
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து சிஎம்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை காவல்துறையின் வேண்டுகோளின்படி, சிஎம்டிஏவின் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்படி, உள்துறை ஒதுக்கீடு மூலம் சென்னை காவல்துறை மேம்பாட்டுக்காக தேவையான வசதிகள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வடசென்னை பகுதியில் 45 இடங்களில் ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவ ரூ.9.16 கோடி, பொதுமக்கள்...
தவெக-தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து கடலூரில் அடுத்த ஆண்டு ஜன. 9-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டிக் கோட்டை பகுதியில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக வளர்ச்சியை நோக்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததற்காக...
மதுபான கொள்முதல், விற்பனை விவரங்களை டாஸ்மாக் வலைதளத்தில் பதிவேற்றக் கோரி வழக்கில், அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் வலைதளத்தில் வெளியிடப்படும் ஆண்டறிக்கையில் கொள்முதல் நிறுவனங்களின் விவரம், அதிக அளவில் விற்பனையான மதுபானத்தின் விவரம், விலை, உரிமக் கட்டணம், சிறப்புக் கட்டணம், வருவாய் உள்ளிட்ட...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில், போரூர் - பூந்தமல்லி வரையிலான மற்றொரு பாதையில் (கீழ் பாதை) ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம்...
ரயிலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில், ரயில் பயணத்தின்போது, பயணிகள் அடையாள அட்டைக்கு ஆதாரை காண்பித்தால் அதை ஸ்கேன் செய்து பரிசோதிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர், இதனால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பயண தேதிக்கு ஒருநாள் முன்பாக தட்கல் முறையிலும் டிக்கெட்...
புதுச்சேரி அரசு வருவாயை அதிகரிக்க மதுபானங்களைத் தொடர்ந்து பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுவை அரசு ஏற்கெனவே முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்து 500- ஆக உயர்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின் மாத உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.1,000-மாகவும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி கூடுதல் செலவாகும். இதற்கு வருவாயை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மதுபானங்களுக்கான...
ரயில்வே கேட்டுகளை கடக்கும்போது, செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என, சர்வதேச லெவல் கிராஸிங் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பல்லாவரம் - தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர். ரயில் பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது, சிலர் பாதுகாப்பு விதிமுறை பின்பற்றுவதில்லை. இதனால், ரயில்களில் மோதி உயிரிழக்கின்றனர். எனவே, ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, ஆண்டுதோறும்...
“வெளியில தலைக்காட்ட முடியல... ஓட்டுப் போட்ட மக்களுக்கும் பதில் சொல்ல முடியல. அடுத்த தேர்தலுக்கு வார்டுக்குள்ள ஓட்டுக் கேட்டுப் போறதே சிரமமாகிடும் போலிருக்கு” - இப்படிப் புலம்புகிறவர்கள் வேறு யாருமல்ல... வேலூர் மாநகராட்சியில் இருக்கும் திமுக-வின் நான்கு மண்டலக்குழு தலைவர்களும் தான். இவர்களை இப்படி புலம்ப வைத்திருப்பவர் திமுக-வைச் சேர்ந்த மேயர் சுஜாதா! ​தி​முக வசமிருக்​கும் வேலூர் மாநக​ராட்​சி​யில் மேயர், துணை மேயர் 4 மண்​டலங்​களின் தலை​வர்​கள் என அனைத்​தை​யும்...
அதிமுக ஆட்சி காலத்தில் (2011 - 2021) சுமார் எட்டாண்டு காலம் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர். அப்போது சுகாதாரத்துறைக்கு அமைச்சராக இருந்த இவர், குட்கா முறைகேடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்ப்பு, தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிகளை மீறி அனுமதி அளித்தது, கரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கினார். இத்தனை சர்ச்சைகளில் சிக்கியவர், இப்போது இருக்கும்...
வாக்களித்த மக்களுக்கு நான்கு நல்ல விஷயங்களைச் செய்துகொடுத்தவர்கள், அந்த நம்பிக்கையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட துணிவார்கள். அப்படியில்லாமல் வாக்களித்த மக்களின் சுக துக்கங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்குபவர்களை மக்களும் சமயம் வரும் போது போட்டுப் பார்த்துவிடுவார்கள். அப்படியொரு அனுபவம் கிடைத்ததாலோ என்னவோ, தொகுதிக்கு வெளியே வசித்த புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலுக்காக சொந்தத் தொகுதிக்கே வீட்டை மாற்றிக் கொண்டு மக்கள் சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறார். ​பாஜக-வைச் சேர்ந்த...