ஒரு மலையாளி என்ற முறையில் மத்திய பட்ஜெட்டில் திருப்தி அளிக்கும் எதுவும் இல்லை: சசி தரூர் கருத்து
admin - 0
மத்திய பட்ஜெட் 2026-27-ல் ஒரு மலையாளி என்ற முறையில் தனக்கு திருப்தி அளிக்கும் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறினார்.
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆயுர்வேதத்தில் நீண்ட பாரம்பரியம் கொண்ட கேரளாவுக்கு ஓர் ஆயுர்வேத நிறுவனம் தேவை. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் தொடர்பான அறிவிப்புக்காக காத்திருந்தோம். ஆனால் நாங்கள் கேரளாவின் பெயரை கேட்கவில்லை.
மீனவர்கள் மற்றும்...
மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றமளிக்கும் வருந்தத்தக்க பட்ஜெட் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய பட்ஜெட் சாதாரண மக்களை புறக்கணித்துள்ளது. பட்ஜெட்டின் விளைவால் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் ஏன் திறக்கப்பட்டன? என்ற கேள்வியை விட பங்குகள் மேலும் எவ்வளவு வீழ்ச்சி அடையும் என்ற கேள்விதான் உண்மையில் எழுந்தது.
நடுத்தர வர்க்கத்தினர் ஏமாற்றப்பட்டுள்ளனர்....
2026-27ம் நிதியாண்டில் தலைமை தேர்தல் ஆணையத்துக்காக ரூ.382.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025-26-ல் ஒதுக்கப்பட்டதை விட 25% அதிகம். இதில் ரூ.367.69 கோடி நிதி, தேர்தல் தொடர்பான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள நிதி, நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் செல வினங்களுக்காக செலவிடப்படும். மேலும், வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் 2026–27- க்கான மத்திய பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை டெல்லியில் இன்று மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். இதற்காக, நேற்று கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட் திசையற்றது, தொலைநோக்குப் பார்வையற்றது, செயலற்றது. இது பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும்...
‘‘அமைதி, நீதி, சுதந்திரத்துக்காக அதிகபட்ச தியாகங்கள் செய்த மகாத்மா காந்தி, இந்தியாவின் அழியாத ஆன்மா’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமைதி,...
மறைந்த அஜித் பவாரின் அஸ்தி பாராமதியில் உள்ள நீரா மற்றும் கர்ஷா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கரைக்கப்பட்டது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் புனே மாவட்டம் பாராமதியில் உள்ள வித்ய பிரதிஸ்தான் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.
இங்கு அஜித் பவாரின் மகன்கள் பர்த் மற்றும் ஜே ஆகியோர் தங்களது தந்தையின் அஸ்தியை நேற்று சேகரித்தனர்....
ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு ரூ.20 கோடி சொத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், நடிபூரு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாச ராவ் (43). இவர் 2010-ல் ஊர்க்காவல் படை வீரராக பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையில் 15 ஆண்டுகளாக வேலைசெய்து வந்தார்.
பத்திரப்பதிவு அலுவலக சப்-ரிஜிஸ்டர்கள், தாசில்தார்கள், மண்டல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்களுக்கு லஞ்ச ஒழிப்பு...
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாநகராட்சி மேயராக பாஜகவின் சாரதா கேட்கரும், துணை மேயராக அமோல் கோகேவும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸின் இருஅணிகளும் இணைந்த ஆதரவுடன் இவர்கள் வெற்றிபெற்றதாக மாநகராட்சி ஆணையர் சுனில் லஹானே தெரிவித்தார்.
80 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியில், மேயர் பதவிக்குப் போட்டியிட்ட சாரதா 45 வாக்குகளை பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா (யுபிடி) வேட்பாளர் சுரேகா 32 வாக்கு கள் மட்டுமே...
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன் என திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் தொடர்ந்து காங்கிரஸில் இருக்கிறேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன். காங்கிரஸில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன்....
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையிலான குழு, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை வரும் திங்கட்கிழமை மாலை சந்திக்க உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் குழுவை சந்திக்க பிப்ரவரி 2ம் தேதி மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேரம் ஒதுக்கியுள்ளார்” என்று தெரிவித்தனர்.
இது குறித்து மம்தா பானர்ஜி சிங்கூரில் நேற்று...
