Google search engine
மத்திய பிரதேச மாநிலம், நரசிங்பூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சந்தியா சவுத்ரி. இவர் கடந்த 27-ம் தேதி மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் சந்தியா அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நரசிங்பூர் எஸ்.பி. மிருககி டேகா கூறுகையில், “இந்த சம்பவத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அபிஷேக் கோஸ்டி என்ற...
டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில் இத்​திட்​டம் மக்​கள் இயக்​க​மாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்​டல் இந்தியா திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் வெற்​றிகர​மாக 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: பத்து ஆண்​டு​களுக்கு முன், இந்தியா மிகுந்த நம்​பிக்​கை​யுடன் அறியப்​ப​டாத...
தலைநகர் டெல்​லி​யில் 10 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட டீசல் வாக​னங்​கள், 15 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட பெட்​ரோல் வாக​னங்​களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்​கப்​பட​வில்​லை. தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசு அதி​க​மாக இருப்​ப​தில் வாகனங்​கள் பெரும் பங்கு வகிக்​கின்​றன. டெல்​லி​யில் காற்று மாசுவை கட்​டுப்​படுத்த பல நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதனால் பழமை​யான வாக​னங்​கள் டெல்​லி​யில் இயக்​கப்​படு​வதை தடுத்து நிறுத்த காற்​றுத் தர மேலாண்மை ஆணை​யம் உத்​தரவு ஒன்றை பிறப்​பித்​தது. 10 ஆண்டு...
 உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்தவர் அன்சர் அகமது சித்திக். இவர் கடந்த மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக புலந்த்சாஹர் காவல் நிலையத்தில் சித்திக் மீது பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சித்திக் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களைக்...
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த மாதம் 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார். சர்வதேச விமான போக்குவரத்து இயக்க விதிமுறைகளின்படி விபத்து நடைபெற்ற 30 நாட்களுக்குள், விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கையை இந்தியா வெளியிட வேண்டும். வெடி விபத்து உட்பட அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக விமான போக்குவரத்து...
தெலங்​கா​னா​ மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலை​யில் உள்ள ரியாக்​டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்​தில் சம்பவ இடத்​தில் 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த 60-க்​கும் மேற்​பட்​டோர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். சிகாச்சி ஆலை​யின் துணை தலை​வர் எல்​.எஸ் கோஹன் உட்பட இது​வரை 36 பேர் உயி​ரிழந்துள்​ளனர். தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து...
பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: காங்​கிரஸ், ஊழல் மற்​றும் அடிமைத்​தனம். இந்த வகைப்​படுத்​தப்​ப​டாத ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க புல​னாய்வு அமைப்​பால் (சிஐஏ) வெளி​யிடப்​பட்​டது. அதில், மறைந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் எச்​.கே.எல்​.பகத் தலை​மையி​லான 150-க்​கும் மேற்​பட்ட எம்​.பி.க்​கள், ரஷ்​யா​வின் உளவாளி​யாக செயல்பட அந்த நாட்​டிட​மிருந்து நிதி பெற்​ற​தாகக் கூறப்​பட்​டுள்​ளது. காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது, ரஷ்ய புல​னாய்வு அமைப்​பைச் சேர்ந்த 1,100...
குஜ​ராத் மாநிலம் கண்ட்லா துறை​முகத்​தில் இருந்து ஓமன் நாட்​டின் ஷினாஸ் துறை​முகம் நோக்கி 'எம்டி யி செங் 6’ என்ற எண்​ணெய் கப்​பல் சென்று கொண்​டிருந்​தது. பலாவு நாட்டு கொடி​யுடன் சென்ற இந்த கப்​பலில் இந்​திய மாலுமிகள் 14 பேர் இருந்​தனர். இந்த கப்​பலின் இன்​ஜின் அறை​யில் திடீரென தீப்​பற்​றியது. இதுகுறித்து ஓமன் வளை​கு​டா​வில் இருந்த, இந்​திய கடற்​படை​யின் ஐஎன்​எஸ் தபார் போர்க் கப்​பலுக்கு நேற்று முன்​தினம் தகவல் தெரிவிக்​கப்​பட்​டு,...
இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பயனடைவோர் 10 ஆண்டில் 19-லிருந்து 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ‘நீடித்த வளர்ச்சி இலக்​கு​கள் (எஸ்​டிஜி) - நேஷனல் இண்​டிகேட்​டர் பிரேம்​வொர்க் முன்​னேற்ற அறிக்கை 2025’ என்​பது இந்​தி​யா​வின் வளர்ச்சி குறித்த தரவு சார்ந்த ஆதா​ரங்​களை வழங்​கு​கிறது. புள்​ளி​யியல் தினத்தை முன்​னிட்டு வெளி​யிடப்பட்​டுள்ள இந்த அறிக்​கையில், வறுமை​யில் வாடும் அனைத்து வயது ஆண்​கள், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளின் விகிதம்...
​விசா மறுக்​கப்​பட்​ட​தால் சட்​ட​விரோத​மாக எல்லை கடந்து இந்​தியா வந்த, பாகிஸ்​தான் தம்​ப​தி​தார் பாலை​வனத்​தில் பரி​தாப​மாக உயி​ரிழந்த சம்​பவம் நடந்​துள்​ளது. பாகிஸ்​தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்​டம் மிர்​பூர் மத்​தல்லோ பகு​தி​யைச் சேர்ந்​தவர் ரவிக்​கு​மார் (17). இவரது மனைவி சாந்​தி​பாய் (15). இவர்​களுக்கு கடந்த 4 மாதங்​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ரவிக்​கு​மாருக்கு சரி​யான வேலை இல்லை. இந்​தி​யா​வுக்​குச் சென்​றால் நல்ல வேலை கிடைத்து மனை​வி​யுடன் சுக​மாக வாழலாம்...