Google search engine
மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்​வர் ஒமர் அப்​துல்லா நேற்று தொடங்கி வைத்தார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: 2025-ம் ஆண்டு எங்​களுக்கு எளி​தான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்​காம் தாக்​குதலுக்கு முன்பு மற்​றும் பின்பு என 2 பகு​தி​களாகப் பிரிக்​கலாம். பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு ஜம்​மு-​காஷ்மீரில் தற்​போது சுற்​றுலா மீண்​டும் எழுச்சி பெற்று வரு​கிறது. மேற்கு வங்க மக்​கள் ஜம்மு...
 மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு தொழிலாளர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ்...
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கேன்டீனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதில் அவருக்கு அறையில் கொண்டுவந்து தரப்பட்ட உணவு கெட்டுப்போய் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கெய்க்வாட், கேன்டீன் சென்று ஊழியர் ஒருவரை சரமாரியாக தாக்கினார். கேன்டீன் ஊழியரை கெய்க்வாட் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி...
மாம்பழ விவ​சா​யிகளிடம் குறை​களை கேட்க நேற்று சித்​தூர் மாவட்​டம் வந்த முன்​னாள் ஆந்​திர முதல்​வர் ஜெகன் மோகன் ரெட்​டியை சந்​திக்க போலீஸ் நிபந்​தனை​களை மீறி ஆயிரக்​கணக்​கான ஒய்​.எஸ்​.ஆர் காங்​கிரஸ் கட்​சி​யின் தொண்டர்கள் குவிந்​த​தால், சென்​னை-பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலை​யில் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​தது. இந்த ஆண்டு மா விளைச்​சல் அதி​க​மான​தால், மாங்​காய் மண்​டிகளில் மாங்​காய்​களை மிக குறைந்த விலைக்கு விவ​சா​யிகள் விற்க நேரிட்​டது. கிலோ​வுக்கு ரூ.4 மானி​யம் கொடுப்​ப​தாக ஆந்​திர அரசு அறி​வித்​தும்...
அமெரிக்காவில் ‘பிரேக்கிங் பேட்' என்ற தொலைக்காட்சி தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. அதில், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் போதை மருந்து தயாரிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இதே பாணியில் ராஜஸ்தான் மாநிலம் கங்கா சாகர் மாவட்டம் முக்லவா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மனோஜ் பார்கே (25), போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியர் இந்திரஜீத் விஷ்னோய் ஆகிய இருவரும் போதை மருந்து தயாரித்துள்ளனர். ஒரு...
ஹைத​ரா​பாத்​தில் கலப்பட கள் குடித்​த​தில் 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ஹைத​ரா​பாத் கூகட்​பல்​லி​யில் நேற்று அதி​காலை கலப்பட கள் குடித்த 19 பேர் வாந்​தி, மயக்​கம் ஏற்பட்டு கீழே விழுந்​தனர். இவர்​களில் சிலர் தனி​யார் மருத்​து​வ​மனைக்​கும், சிலர் செகந்​தி​ரா​பாத் காந்தி அரசு மருத்​து​வ​மனைக்​கும் கொண்டு செல்​லப்​பட்டு அனு​ம​திக்​கப்​பட்​டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் தொடர்ந்து...
உத்​தரபிரதேசத்​தில் முதன்​முறை​யாக மது​பானத் தொழிலுக்​கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடை​பெற உள்​ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்​பிலான முதலீட்டு திட்​டங்​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. உ.பி.​யில் பல்​வேறு தொழில்​களை ஊக்​குவிக்க முதலீட்டு மாநாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் முதன்​முறை​யாக மது உற்​பத்​தியை ஊக்​குவிக்​கும் முதலீட்டு மாநாடும் நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்டை லக்​னோ​வின் இந்​திரா காந்தி பிர​திஷ்​டானில் மாநில கலால் துறை நடத்​துகிறது....
 சத்​தீஸ்​கரின் தண்​டே​வா​டா​வில் 2 பெண்​கள் உள்​ளிட்ட 12 நக்​சலைட்​கள், போலீஸ், சிஆர்​பிஎப் அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரணடைந்​துள்​ளனர். இவர்​களில் ரூ.28.50 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட 9 பேரும் அடங்​கு​வர். அரசின் ‘உங்​கள் வீடு, கிராமத்​துக்கு திரும்​பு' பிரச்​சா​ரத்​தின் கீழ் மாவட்​டத்​தில் இது​வரை 1,005 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர். இந்த சாதனை அரசின் தொலைநோக்கு கொள்​கைகள், பாது​காப்​புப் படைகளின் தொடர் நடவடிக்கை மற்​றும் உள்​ளூர் சமூகங்​களின் நம்​பிக்​கையை பிர​திபலிக்​கிறது. மாவோ​யிஸ்ட்​களின் வெற்று சித்​தாந்​தத்​தால்...
இறக்​கும​தி-ஏற்​றுமதி மோசடி​யில் குற்​றம் சாட்​டப்​பட்டு 25 ஆண்​டு​கள் அமெரிக்​கா​வில் தலைமறை​வாக இருந்த பொருளா​தார குற்​ற​வாளி மோனிகா கபூர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். இதற்​கான அனு​ம​தியை நியூ​யார்க் நகர நீதி​மன்றம் வழங்​கியது. இதையடுத்​து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். ‘‘மோனிகா ஓவர்​சீஸ்’’ என்ற நிறு​வனத்​தின் உரிமை​யாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்​களான ராஜன் கன்னா மற்​றும் ராஜீவ் கன்​னா​வுடன் சேர்ந்து நகை வணி​கத்​திற்​கான வங்கி...
கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இதே​போல கதக் மாவட்​டத்​தி​லும் 20-க்​கும் மேற்​பட்​டோர் திடீர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து ஆய்வு செய்​வதற்​காக கர்​நாடக அரசு 10 மருத்​து​வர்​கள் அடங்​கிய நிபுணர் குழுவை அமைத்​தது. மருத்​து​வ நிபுணர் குழு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் தினேஷ் குண்​டு​ரா​விடம் ஆய்​வறிக்​கையை சமர்ப்​பித்​தது. அதனை பெற்​றுக்​கொண்ட பின்​னர்​,​ தினேஷ் குண்டு ராவ் கூறிய​தாவது:...