பெட்ரோல், டீசல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று 132-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மிக நீண்ட காலம் நீடித்தன. கரோனா காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த உலகமும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் உலகின்...
இந்திய விமானப்படையில் உள்ள மிக்-29 போர் விமானத்தில் நவீன அஸ்ராம் ஏவுகணைகள் இணைக்கப்பட உள்ளன.
இந்திய விமானப்படையில் மிக்-29 ரக போர் விமானங்களின் 2 படைப் பிரிவுகள் உள்ளன. இந்த விமானங்களில் எதிரி நாட்டு போர் விமானங்களை தகர்க்கும் வான் தாக்குதலுக்கு ரஷ்ய தயாரிப்பான ஆர்-73 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது 10 முதல் 15 கி.மீ தூரம் மட்டும் சென்று தாக்கும். விமானப் படையில் உள்ள தேஜஸ்...
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் 103 வயதான பாட்டி காஷிபா. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்துக்கு அருகில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார்.
இப்போது அவரது மகன், மருமகள் கடையை நடத்தினாலும் காஷிபா தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்தப் பாட்டி இஞ்சியைத் துருவி தேநீர் தயாரிப்பதைக் காணலாம். பல...
ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பத்ம பூஷன் விருது பெற்றவருமான விஜய்பத் சிங்கானியா (87) மும்பையில் காலமானார்.
விஜய்பத் இறுதிச் சடங்கு நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. அவருக்கு மனைவி ஆஷாதேவி மற்றும் மதுபதி, ஷெபாலி ருயியா, கவுதம் ஆகிய பிள்ளைகள் உள்ளனர். ஆண்களுக்கான ஆடைத் துறையில் ரேமண்ட் நிறுவனத்தை நம்பகமான பிராண்டாக மாற்றியதில் விஜய்பத் முக்கிய பங்கு வகித்தார். ஒரு சிறந்த விமானியான விஜய்பத் சிங்கானியா, ஹாட் ஏர்...
உ.பி. விவசாயி மனைவி கணக்கில் ரூ.10 கோடி திடீரென வரவு வைத்த வங்கி – ஒரு ரூபாய் கூட எடுக்காததால் குவியும் பாராட்டு
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்புரி மாவட்டம், தேவ்கஞ்ச் கிராமத்தில் வசிப்பவர் பராஸ்பன் பஹிலியா, விவசாயி. இவரது மனைவி ரீடா. இவர் பேங்க் ஆப் இண்டியாவில் கணக்கு வைத்துள்ளார்.
அஷ்டமி விழாவை முன்னிட்டு வங்கிக்கு விடுமுறை என்பதால், அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு ரீடா சென்று தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று பார்த்தார். அப்போது, ரூ.9 கோடியே 99 லட்சத்து 49,588 இருந்ததைப் பார்த்து ரீடா மலைத்துப்...
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதேபோல நாட்டின் எல்பிஜி தேவையில் 60 சதவீதமும், எல்என்ஜி தேவையில் 50 சதவீதமும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
போர்...
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டது. எரிபொருள் விநியோகமும் பாதிப்படைந்தது.
இதையடுத்து வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது. அதன்பின் ஈரான் அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதற்கு அனுமதி பெற்றது. ரஷ்யா உட்பட பிற நாடுகளில் இருந்தும் எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் மூலம் எரிபொருள் வரத்து...
2019-ல் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற ம.பி. அதிகாரி ரூ.2.5 கோடி ஊழல் வழக்கில் கைது
admin - 0
2019-ல் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்ற மத்தியபிரதேச மாநில அரசு பெண் அதிகாரி ரூ. 2.5 கோடி நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் அமிதா சிங் தோமர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.50 லட்சம் பரிசு வென்றிருந்தார். இதனால் நாடு முழுவதும்...
7 கோடி பயணிகளை கையாளும் நொய்டா சர்வதேச விமான நிலையம்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
admin - 0
நொய்டா ஜேவார் சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு துணையாகச் செயல்படும் வகையில் டெல்லி - என்சிஆர் பிராந்தியத்துக்கான 2-வது சர்வதேச விமான நிலையமாக நொய்டா ஜேவார் விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் பயணத்தில் இந்தத் திறப்பு விழா ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமையும்...
ஆந்திர மாநிலம், மார்க்காபுரம் அருகே ராயவரம் எனுமிடத்தில் வியாழக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியின் டீசல் டேங்க் மீது தனியார் சொகுசு பேருந்து மோதியது. இதில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 14 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக பேருந்து உரிமையாளர் ஹரிகிருஷ்ணாவை மார்க்காபுரம் போலீஸார் நேற்று கைது செய்தனர். பேருந்து சரிவர பிரேக் பிடிக்காமலும், ஸ்டீயரிங் நின்று போனதாலும் தான் இந்த விபத்து...










