Google search engine
உத்தர பிரதேச மாநிலம் கான்​பூர் ஜிஎஸ்​விஎம் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் உயிருடன் இருந்த ஒருவர் பெயரில் உடற்​கூ​ராய்​வு அறிக்கை அனுப்​பிய சம்​பவத்​தில் மருத்​து​வர் உள்​ளிட்ட மூவர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். கான்​பூரில் பிரபல ஜிஎஸ்​விஎம் மருத்​து​வக் கல்​லூரி​யில் ஹாலெட் மருத்​து​வ​மனை செயல்​படு​கிறது. இங்கு ஓர் அதிர்ச்​சி​யூட்​டும் சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. வார்டு எண் 12-ல் உள்ள படுக்கை எண் 42-ல் ஒரு அடை​யாளம் தெரி​யாத நபர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்​சைக்கு...
வான் தகவல் தொடர்பு கருவி​களை தயாரிக்க இந்​திய விமானப்​படை, சென்னை ஐஐடி​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. விமானப்​படை பயன்​பாட்​டுக்​காக உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் வான் தகவல் தொடர்பு கருவி​களை தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டது. இதற்​காக விமானப்​படை​யின் மென்​பொருள் மேம்​பாட்டு மையம் (எஸ்​டிஐ) ஐஐடி சென்​னை​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. பாது​காப்பு தொழில்​நுட்​பத்​தில் தற்​சார்பு நிலையை ஏற்​படுத்​து​வ​தி​லும், தற்​சார்பு இந்​தியா தொலைநோக்கை நனவாக்​கு​வ​தி​லும் இந்த ஒப்​பந்​தம் மிக முக்​கிய​மான நடவடிக்​கை. இந்த ஒப்​பந்​தத்​தில் விமானப்​படை​யின்...
கடந்த சில வாரங்​களாக டெல்​லி, உத்தர பிரதேசம், ஹரி​யானா உள்​ளிட்ட மாநிலங்​களில் கடும் பனிமூட்​டம் நில​வு​கிறது. பனிமூட்​டம் தொடர்​பாக டெல்லி மற்​றும் உத்தர பிரதேசத்​துக்கு நேற்று ஆரஞ்சு எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டது. இந்த சூழலில் வடஇந்​தியா முழு​வதும் விமான சேவை​கள் பாதிக்​கப்​பட்டு உள்​ளன. டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் நேற்று காலை நில​விய கடும் பனிமூட்​டம் காரண​மாக 128 விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 200-க்​கும் மேற்​பட்ட விமானங்கள்...
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த பட்ஜெட் எவ்வாறு சரிசெய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து பொருளாதார அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாட உள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் துணைத்...
கேரள மாநிலத்​தில் பாஜக​ வளர்ச்​சிக்கு காங்​கிரஸ் கட்சி வழி​வகுப்​ப​தாக முதல்​வர் பின​ராயி விஜயன் நேற்று குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து பின​ராயி விஜயன் பேஸ்​புக் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: மட்​டத்​தூரில் நடை​பெற்ற பஞ்​சா​யத்து தேர்​தலில் 8 காங்​கிரஸ் கவுன்​சிலர்​கள் அக்​கட்​சியி​லிருந்து வில​கி, தலை​வர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்​பாள​ருக்கு ஆதர​வளிக்க பாஜக​வுடன் கைகோத்​தனர். இதன்​மூலம், காங்​கிரஸார் பாஜக​வில் சேரு​வதற்கு வாய்ப்​புக்​காக காத்​திருப்​பதை மட்​டத்​தூர் சம்​பவம் உறு​திப்​படுத்​தி​யுள்​ளது. பாஜக அவர்​களை முழு​வது​மாக விழுங்​கி​விட்​டது. இத்​தகைய...
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் அதிவிரைவு பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ரயிலின் இரண்டு பேட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வண்டி எண் 18189-ன் பி-1 மற்றும் எம்-2 ஆகிய இரண்டு பெட்டிகளில் தீ பரவியது....
டெல்​லி​யின் துவாரகா பகு​தி​யில் விசா இல்​லாமல் வெளி​நாட்​டினர் சிலர் தங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​துள்​ளது. கடந்த 24-ம் தேதி அங்கு போலீ​ஸார் சோதனை நடத்திய ​போது, நைஜீரி​யா​வைச் சேர்ந்த 7 பேர் விசா காலம் முடிந்த பின்​னரும் தங்கி இருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவர்​களை வெளி​நாட்​டினர் மண்டல பதிவு அலு​வல​கத்​தில் ஆஜர்​படுத்தி உள்​ளனர். அவர்​களை நாடு கடத்​து​மாறு பதிவு அலு​வலக அதி​காரி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, நாடு​கடத்​தும் நடை​முறை​களை முடிக்​கும் வரை​யில்...
பிஹார் மாநிலத்​தின் ஜாமுயி மாவட்​டத்​தில் லகா​பான் மற்​றும் சிமுல்​தாலா ரயில் நிலை​யங்​களுக்கு இடையே சரக்கு ரயி​லின் 8 பெட்​டிகள் நேற்று முன்​தினம் இரவு 11.25 மணிக்கு தடம்புரண்​டன. இதனால் 20-க்​கும் மேற்​பட்ட ரயில் சேவை​கள் பாதிக்​கப்​பட்​டன. தடம்​புரண்ட பெட்​டிகளை அகற்​றும் பணி, போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று வரு​கிறது. இந்த விபத்து காரண​மாக இந்த வழித்​தடத்​தில் செல்​லும் பல எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. பல ரயில்​கள் தன்​பாத் - கயா வழித்​தடத்​தில்​...
ஆர்​எஸ்​எஸ் அமைப்பை பாராட்​டிய விவ​காரத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் திக் விஜய் சிங்​குக்கு சசி தரூர் எம்.பி. ஆதரவு தெரி​வித்​துள்​ளார். மத்​திய பிரதேசத்தை சேர்ந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் திக்​விஜய் சிங் சமூக வலை​தளத்​தில் பிரதமர் மோடி​யின் பழைய புகைப்​படத்தை பதி​விட்டு ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் ஒழுக்​கம், கட்டுப்​பாட்டை புகழ்ந்​தார். அதோடு காங்​கிரஸின் கட்​டமைப்​பு​களை வலுப்​படுத்த ராகுல் கவனம் செலுத்த வேண்​டும் என்​றும் அவர் குறிப்​பிட்​டார். இந்த சூழலில் காங்​கிரஸ் கட்​சி​யின் 140-வது...
காஷ்மீர் முன்​னாள் முதல்​வரும் மக்​கள் ஜனநாயக கட்​சி​யின் (பிடிபி) தலை​வரு​மான மெகபூபா முப்​தி, ஸ்ரீநகரில் நேற்று நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தார். அப்​போது அவர் காஷ்மீரி மொழி​யில் பேசி​னார். சில நிருபர்​கள் குறுக்​கிட்​டு, உருது மொழி​யில் பேசு​மாறு வற்​புறுத்​தினர். அப்​போது மெகபூபா முப்தி கூறும்​போது, “காஷ்மீரி மொழிக்கு மதிப்பு அளி​யுங்​கள். நமது மொழியைக் காப்​பாற்ற வேண்​டியது நமது கடமை. தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினிடம் ஆங்​கிலம் அல்​லது உருது மொழி​யில் பேச கோரு​வீர்​களா?”...