“அறவழியில் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் போராட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்துக்காகவே தடியடி நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அமைதியான போராட்டங்கள் மீது இது மாதிரியான நடவடிக்கை கூடாது.” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய சூழலில் அதற்கு உச்ச நீதிமன்றம் இவ்வாறாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட்...
“பிஹாரில் மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தியது ஏன்?” – பிரதமருக்கு ராகுல் கேள்வி
admin - 0
“டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளும், பிஹாரில் போராடிய மாணவர்கள் மீது ஏகே-47 ரகத் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களை தாக்கி நசுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், மாணவர்கள் மீது அல்ல” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு எதிராக அப்பட்டமான கொலைவெறியைக் கொண்டுள்ளது.
பிஹாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏகே-47 ரக துப்பாக்கிக் குண்டுகள்...
வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை
admin - 0
நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும்...
போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம் நாத், இந்திய உளவுத் துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, கல்வித்துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால், போக்குவரத்து துறை நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெரும்பாலான போட்டித் தேர்வுகள்,...
வினாத்தாள் கசிவு தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,...
நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோதரர்களின் ஜாமீன் மனுக்களை சிறப்பு விரைவு நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் தினேஷ் பிவால், விகாஸ் பிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என ஜூலை 23 அன்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம்,...
“பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்” – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
admin - 0
காஷ்மீரில் 1999-ம் ஆண்டு மே மாதம் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கார்கில் போரின் 27-ம் ஆண்டு வெற்றி தின நிகழ்ச்சி லடாக்கின் கார்கில் போர் நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை...
“மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” – ராகுல் காந்தி
admin - 0
“டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது யார்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பழமையான பவுத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் நேற்று அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டது.
தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவின் 48-வது அமர்வில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், யுனெஸ் கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறும் இந்தியாவின் 45-வது இடமாக சாரநாத் பெருமை பெற்றுள்ளது.
முன்னதாக, 2025-26 தேர்வுச் சுற்றுக்காக ‘பழமையான...
சிஜேபி போராட்ட ‘பின்புலச் சதி’யை என்ஐஏ விசாரிக்க கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஐகோர்ட்
admin - 0
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த 20-ம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெளிநாட்டு அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை (ஜூலை 23) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி...









