திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில், டெண்டர் மூலம் கலப்பட நெய் வாங்கியது தொடர்பாக சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள போலேபாபா ஆர்கானிக் டெய்ரி நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு அவர்கள் ரூ.250 கோடிக்கு 68 லட்சம் கிலோ நெய்யை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், 2022-ல் இவர்கள் விநியோகம் செய்த நெய் தரமற்றதாக உள்ளதாக அப்போதைய அறங்காவல்...
ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியின் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ மாகண்டி கோபிநாத் மரணம் அடைந்ததால் இந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
4.01 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் மொத்தம் 58 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் பிஆர்எஸ் வேட்பாளர் மாகண்டி சுனிதா (இவர் மறைந்த பிஆர்எஸ் எம்எல்ஏ மாகண்டி கோபிநாத்தின் மனைவி), காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ், பாஜக வேட்பாளர் தீபக் ரெட்டி ஆகியோர் இடையில்தான் மும்முனைப்...
மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்
admin - 0
தாய்லாந்து - மியான்மர் எல்லையில் சைபர் மோசடி மையங்கள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து சர்வதேச அளவில் அனைத்து விதமான சைபர் மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வெளிநாட்டு வேலை என கூறி தாய்லாந்து அழைத்து வரப்படுபவர்களை மியான்மர் எல்லையில் உள்ள சைபர் மோசடி மையங்களில் சீனாவை சேர்ந்த கும்பல் வலுக்கட்டாயமாக பணியமர்த்துகிறது. இந்த கும்பலிடம் சிக்கியவர்கள் எளிதில் தப்பிக்க முடியாது.
இந்நிலையில் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தையடுத்து,...
உ.பி.யில் பள்ளி, கல்லூரிகளில் ‘வந்தே மாதரம்' தேசிய பாடலை பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யின் கோரக்பூரில் தேசிய ஒற்றுமை தின பேரணி நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது:
சர்தார் வல்லபபாய் படேல், நமது விவாதங்களின் ஒரு பகுதியாக மாற வேண்டும். உ.பி. முழுவதும் உள்ள பள்ளி,...
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நாரி சக்தி வந்தன் மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் இதுவரை...
ஆந்திர மாநிலம், குண்டூரை அடுத்த பாபட்லா மாவட்டம், கர்மசேது எனும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்யலட்சுமி எனும் ராஜி (23).
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ராஜி காய்ச்சல், இருமல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 7-ம் தேதி காலையில் அவர் படுக்கையில் இருந்து எழாததால் தோழிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், ராஜி இரவு...
திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாமிசம், மதுபானம், சிகரெட், போதைப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் திருப்பதி அலிபிரி பாதாலு மண்டபம் அருகே, தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான ராமசாமி, சரசம்மாள் ஆகியோர் துப்புரவு தொழிலாளர்களுடன் அமர்ந்து மாமிச உணவை சாப்பிட்டுள்ளனர். இதனை அப்பக்கம் நடந்து செல்லும் பக்தர் கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை கண்டித்தனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டதால், அதனை வீடியோ எடுத்து...
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாள்பட்ட நோய்களால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்: மருத்துவ நிபுணர்கள் கருத்து
admin - 0
உலகளவில் ஏற்படும் மரணங்களில் நான்கில் 3 பங்கு நாள்பட்ட நோய்களால் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானவற்றை வாழ்க்கை முறை மாற்றம், குறித்த நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை, தடுப்பூசிகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து உலகின் முன்னணி மருத்துவ நிறுவனமான ஜிஎஸ்கே.வின் மருத்துவ இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வயது வந்தவர்களுக்கு இன்பூளுயன்சா, சுவாச நோய் தொற்று (ஆர்எஸ்வி), அக்கி, அம்மை,...
உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்ளது.
தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. என்றாலும் இந்த நாடுகளிடையே பொதுவான விஷயமாக அரிசி உள்ளது. ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. இவை பெரும்பாலும் எல்லோராலும் வாங்கக் கூடிய விலையிலேயே கிடைக்கின்றன. என்றாலும் ஜப்பானின் கின்மேமை...
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தரம்ஜாய்கர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள புரங்கா கிராமம் அருகே அதானி நிறுவனம் நிலக்கரி சுரங்கம் அமைக்கவுள்ளது. இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களிடம்...










