அனைத்து மருத்துவர்களுக்கும் ஆதாரைப் போல தனிப்பட்ட எண்ணுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)அதற்கான பதிவை தொடங்கியுள்ளது.
தேசிய மருத்துவ பதிவேடு (என்எம்ஆர்) போர்ட்டலை மத்தியசுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய சுகாதார பதிவேடு திட்டம் என்பது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இது, டிஜிட்டல் ஹெல்த்கேர் சூழலை வலுப்படுத்தும் என்பதுடன் இந்திய மக்களுக்கு தரமான...
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் அமைந்துள்ள சஞ்சாலி என்றபகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இதன் அருகே அரசு நிலம் உள்ளது.
இந்நிலையில் மசூதியின் சுற்றுச்சுவர் விரிவுபடுத்தப்பட்டது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து மசூதியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதை இடிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் கடந்த 11-ம் தேதிபோராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது போராட்டக்...
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரத்தை காவல் துறையினரே அழித்துள்ளனர்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு
admin - 0
பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க காவல் துறையினரே ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்று பாஜக கட்சியைச் சேர்ந்த அம்மாநில எதிர்க் கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித் துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “தற்போது தாலா போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. இதன் மூலம் இவ்வழக்கில் கொல்கத்தா காவல்...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், ஒகேனக்கல்லில் அருவிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் குளிக்க தருமபுரி மாவட்ட...
இஃப்தார் விருந்தில் மன்மோகனுடன் தலைமை நீதிபதி பங்கேற்றது சரியா? – காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கேள்வி
admin - 0
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவர் அளித்த இஃப்தார் விருந்து புகைப்படத்தை பாஜக பகிர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த புதன்கிழமை டெல்லியில் உள்ள தனது வீட்டில் விநாயகர் பூஜை நடத்தினார். இந்த பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்து பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம் செய்துள்ளார். ராகுல் ஒருநாள் தீவிரவாதிகளை கூட சந்தித்து பேசலாம் என்று அவர் கூறியுள்ளார்.
தெற்கு பெங்களூரு பாஜகஎம்.பி.யான தேஜஸ்வி சூர்யா,இதுகுறித்து நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இடஒதுக்கீட்டை நீக்குவது தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர் சந்திக்கும் நபர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது....
மகாராஷ்டிராவில் அறுந்து விழுந்த மின்கம்பி குறித்து எச்சரித்த சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
admin - 0
மகாராஷ்டிரா பால்கர் மாவட்ட பள்ளிக்கூட அறிவியல் ஆசிரியர் தர்ஷன். இவரது மகன் ஸ்மித் பந்தாரே (12) மற்றும் மகள் சன்ஸ்கிருதி (9) ஆகிய இருவரும்கடந்த ஆக.25-ம் தேதி வாரவிடுமுறை நாள் என்பதால் வீட்டில்மதியம் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
திடீரென பலத்த சத்தம் வீட்டருகில் கேட்டது. நடந்தது என்ன என்பதை பார்க்க அண்ணன், தங்கை இருவரும் இரண்டாவது மாடியில் உள்ள தங்களது வீட்டின்பால்கனிக்கு ஓடிச்...
சாலையில் தீப்பற்றி எரிந்த காரில் போலி ரூ.2000 நோட்டு கட்டுகள்: நாட்றாம்பள்ளி போலீஸார் தீவிர விசாரணை
admin - 0
நாட்றாம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், காரில் இருந்த போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தீயில் கருகின.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் அபி நரசிம்மன் (58). இவர், மேட்டூரில் இருந்து சென்னைக்கு நேற்று காரில் பயணித்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்தபையனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது கார்திடீரென தீப்பற்றியது. உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தினார். சிறிது நேரத்தில்...
1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் என் தந்தையும் இருந்தார்: மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தகவல்
admin - 0
1984-ல் நடந்த ஏர் இந்தியா விமானக் கடத்தலின்போது எனதுதந்தையும் விமானத்தில் சிக்கியிருந்தார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர்24-ம் தேதி ‘ஐசி 814' என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்154 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் 5 தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டது. பின்னர். மசூத் அசார், உமர்ஷேக் மற்றும் முஷ்டாக்அகமது சர்கார் ஆகிய மூன்று தீவிரவாதிகள் சிறையிலிருந்து...
டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ம்தேதி கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐ-யும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தனக்கு...










