தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டி, வி சாலை கிராமத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது உரையை பாராட்டியும், விமர்சித்தும் வருகின்றனர்.
விஜய் மாநாட்டில் பேசும்போது, ’கூத்தாடிகள்’ குறித்து ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசும்போது, கூத்தாடிகள் என்றால் கேவலமல்ல என்றும், அவர்கள் நாட்டையே...
ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
9-வது ஆயுர்வேத நாள் மற்றும், மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் பிறந்தநாளையொட்டி பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மொத்தம் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணிக்கவுள்ளார்.
நாடு முழுவதும் பொதுமக்கள் இலவசமாக மருத்துவச்...
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1881-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி கடந்த 2011-ம் ஆண்டில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதன்பிறகு கடந்த 2021-ம் ஆண்டில்...
பேருந்தில் கட்டணம் ரூ.50 தர மறுத்த பெண் காவலர்: ராஜஸ்தான், ஹரியானா போலீஸார் மாறி மாறி அபராதம்
admin - 0
ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் பயணச்சீட்டு வாங்க மறுத்த விவகாரம் இரு மாநில போக்குவரத்து போலீஸார் இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த 22-ம் தேதி ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் ஒருவர் பயணம் செய்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து ஹரியானாவின் தர்ஹரா செல்ல அக்காவலரிடம் நடத்துநர் ரூ.50 பயணக் கட்டணம் கேட்டுள்ளார்....
குஜராத்தில் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் டாடா ஏர்பஸ் ஆலையை திறந்தார் மோடி: ஸ்பெயின் பிரதமர் பங்கேற்பு
admin - 0
ராணுவ விமானம் தயாரிப்பதற்கான டாடா - ஏர்பஸ் தொழிற்சாலையை குஜராத் மாநிலம் வடோதராவில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் இணைந்து பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். ‘‘இந்த நாட்டின் சிறந்த மகன் ரத்தன் டாடா உயிரோடு இருந்திருந்தால் இந்த நிகழ்வை பார்த்து மகிழ்ந்திருப்பார்’’ என்று மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விமான உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதில் அதிக...
சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
admin - 0
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம்(முடா) அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா...
கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (அக்.29) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு அருகே அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுகான திருவிழா அங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பட்டாசுகள் கோயில் அருகே...
சத்தீஸ்கரில் 54 போலீஸாரை கொன்ற, 226 வழக்குகள் உள்ள மாவோயிஸ்ட் தலைவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
admin - 0
சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்ட காருண்யா வளப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் முகாம் அமைத்து செயல்படுகின்றனர். அடர்ந்த வனப் பகுதி, மலைகள் என யாரும் எளிதில் செல்ல முடியாத நிலப்பரப்பு என்பதால், மக்கள் விடுதலை கொரில்லா படை (பிஎல்ஜிஏ) என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டு வந்தனர்.
மேலும், சத்தீஸ்கரின் அபுஜ்மார் என்ற அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தலைமை அலுவலகமும் செயல்பட்டு வந்தது. மத்தியில் பாஜக வந்த பிறகு மாவோயிஸ்ட்டுகளை முற்றிலும் ஒடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது....
சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் உட்பட 7 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
admin - 0
சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் செயில் உட்பட 7 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுவதாகவும் அவை பெலகேரி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், பெலகேரி துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல டன் இரும்புத் தாதுவை அதிகாரிகள்...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவை அதிகரிக்கும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இணைகிறார்.
இது குறித்து ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரவிக்குமார் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநிலம்...










