இணையவழியில் பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்யலாம்: முதல்வர் பினராயி விஜயன் உறுதி
admin - 0
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இக்கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள், தரிசனம் மற்றும்பிரசாத டிக்கெட்களை இணையவழியில் முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம். அதேநேரம், முன்பதிவு செய்யாதவர்கள் சபரிமலைக்கு சென்ற பிறகு தேவசம்வாரியம் சார்பில் குறிப்பிட்ட இடங்களில் செயல்படும் மையங்களில் தரிசன டிக்கெட் (ஸ்பாட் புக்கிங்) பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், இந்த ஆண்டுநேரில் தரிசன டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும்...
45% பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளவர்களும் எம்பிபிஎஸ் படிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
admin - 0
புதுடெல்லி: பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு 45 சதவீதம்வரை இருக்கக்கூடிய மாணவர் ஒருவர் தனக்கு மருத்துவப் பட்டப்படிப்புக்கான இடம் மறுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: உடல் ரீதியான குறைபாடு 44 முதல் 45 சதவீதம்வரை இருக்கும் ஒரே காரணத்துக்காக மாணவர் ஒருவருக்கு எம்பிபிஎஸ் சீட் மறுக்கப்படுவதா? இதை...
அகமதாபாத்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த 17 பேரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களைக் குறிவைத்து டிஜிட்டல்அரெஸ்ட் மோசடி மேற்கொள்ளப் படுகிறது. மோசடியில் ஈடுபடுபவர்கள், தங்களை விசாரணை அதிகாரிகள் என கூறி சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வீடியோ கால் செய்து, அவர்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக தெரிவிப்பார்கள். பண மோசடி,...
வக்பு வாரிய திருத்த மசோதா விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
admin - 0
புதுடெல்லி: நாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக நிலங்கள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச் சொத்துகளை கண்காணிக்க, கடந்த 1954-ல் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப் பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த 1995-ம் ஆண்டுவக்பு சட்டம் விரிவுப்படுத்தப் பட்டது.
இந்நிலையில், வக்பு வாரிய நிர்வாக நடவடிக்கைகளை மேம் படுத்தவும், வக்பு வாரியம் தொடர் பான பிரச்சினைகளுக்குத் தீர்வு...
அமராவதி: கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆந்திராவில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லூரில் 146 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து மேலும் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், நெல்லூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால்...
புதுடெல்லி: பிஹாரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நிதிஷ், லாலு கட்சிகளுக்கு புதிய நெருக்கடி உருவாகி உள்ளது.
பிஹார் சட்டப்பேரவையில் காலியாக உள்ள ராம்கர், தராரி, பேலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக இரண்டு கூட்டணிகள் உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான...
காஷ்மீர் முதல்வராக பதவியேற்கிறார் உமர் அப்துல்லா: ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்காது என தகவல்
admin - 0
ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்கிறார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டும் கூட காங்கிரஸ் அதனைப் புறக்கணித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்றைய பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இன்றைய...
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு தீபாவளிக்கு முன்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 9-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போதே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புவெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. எனினும், வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி...
புதுடெல்லி: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்காக 24 மணி நேரத்தில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பெருநிறுவன விவகார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் 1.25 லட்சம் பேர் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,55,109 பேர் பிரதமரின் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். 21-24 வயது பிரிவினருக்கான இன்டர்ன்ஷிப் பயிற்சி...
காஷ்மீர் பேரவைக்கு 5 உறுப்பினர்களை நியமிக்கும் ஆளுநர் அதிகாரத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
admin - 0
புதுடெல்லி: காஷ்மீர் பேரவைக்கு 5 உறுப்பினர் களை நியமிக்க வகை செய்யும் துணைநிலை ஆளுநரின் அதிகா ரத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90-ல் 49 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது. இக்கூட்டணியைச் சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சி 42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய...










