சாலை விபத்​தில் காயம் அடைந்​தவருக்கு பணமில்லா சிகிச்சை அளிக்​கும் திட்டம் மார்ச் 2025-க்​குள் நாடு முழு​வதும் விரிவுபடுத்​தப்​படும் என்று மத்திய சாலை போக்கு​வரத்​துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்​துள்ளார். நெடுஞ்​சாலைகளில் விபத்து​களில் உயிரிழப்​போரின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய சாலை போக்கு​வரத்​துத் துறை அமைச்​சகம் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி பணமில்லா சிகிச்சை திட்​டத்தை அமல்​படுத்​தி​யது. இந்த திட்டம் அசாம், சண்டிகர், புதுச்​சேரி உட்பட சில மாநிலங்​களில் அறிமுகப்​படுத்​தப்​பட்​டது....
விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி, நேற்று தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவரை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின்னர், பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு...
பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் பட்டியலை 3-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ), உலக வங்கி, குற்ற பதிவுகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் தொழிலாளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தரவு ஆதாரங்களை ஒருங்கிணைத்து இந்த பட்டியல்...
பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக் கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடக்கிறது. தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய 3 கட்சிகள் ஆம்...
இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அத்துடன் லிபரல் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைமைகள் அடிக்கடி மாறியபோதும், நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருவதாக பாஜக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை அல்டிமேட் பிக்பாஸ் என்று சித்தரிக்கும் ஒரு...
நாடு முழு​வதும் ஒரே நேரத்​தில் தேர்தல் நடத்து​வதற்கு வகை செய்​யும் மசோதா கடந்த நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடரின்​போது அறிமுகம் செய்​யப்​பட்​டது. இதையடுத்து, அந்த மசோதா நாடாளு​மன்ற கூட்டுக் குழு​வின் பரிசீலனைக்கு அனுப்​பப்​பட்​டது. இதைத்​தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 12 மாநிலங்​களவை உறுப்​பினர்​கள், 27 மக்களவை உறுப்​பினர்கள் அடங்கிய கூட்டுக்​குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு​வின் தலைவராக பாஜக எம்பி பி.வி. சவுத்ரி உள்ளார். இந்த நிலை​யில், ஒரே நாடு, ஒரே...
 கர்நாடகாவில் கடந்த மாதம் நக்சலைட் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் விக்ரம் கவுடா போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதையடுத்து நக்சல் ஒழிப்புபடை அதிகாரிகள் அமைதிக்கான மக்கள் மன்றத்தின் உறுப்பினர் லலிதா நாயக் மூலம் தலைமறைவாக உள்ள நக்சலைட்டு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 6 பேர் சரணடைய விருப்பம் தெரிவித்தனர். அதன்படி 6 பேரும் நேற்று மாலை முதல்வர் சித்தராமையா முன்னிலையில் அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் சரண் அடைந்தனர்....
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து, வி.நாராயணன் பொங்கல் பண்டிகை தினமான ஜன. 14-ம் தேதி பொறுப்பேற்கிறார். அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். கேரள...
கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உ.பி. மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜு, ஹர்தோய் மாவட்ட போலீஸில் ஒரு புகாரைக் கொடுத்துள்ளர். அதில் தன்னையும், தனது 6 குழந்தைகளையும் தவிக்க விட்டு தனது மனைவி ராஜேஸ்வரி, அதே...
கடந்த 40 ஆண்டுகளாக வங்க தேச விசா நீட்டிப்பில் பிஹாரில் வசித்த சுமித்ரா பிரசாத், குடியுரிமை திருத்த சட்டத்தின்(சிஏஏ) கீழ் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். பிஹாரின் கதிகார் மாவட்டத்தில் பிறந்தவர் சுமித்ரா (40). இவர் கடந்த 1970-ம் ஆண்டு தனது 5-வது வயதில் கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றார். பின்பு அங்கேயே தங்கி வளர்ந்தார். பள்ளி படிப்பையும் அங்கு முடித்தார். கிழக்கு பாகிஸ்தான் கடந்த...