பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரின் சொத்துகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் முடக்கியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவைச் சேர்ந்தவர் முபாஷிர் அகமது. இவர் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர். இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் நேற்று முடக்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “முபாஷிர் அகமதுவின் அசையா சொத்து டிரால் மண்டலத்திலுள்ள சையதாபாதில்...
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் நேற்று முன்தினம் காலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (என்டிஆர்எப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உறுதுணையாக எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எஃப்) செயல்பட்டனர்.
நேற்று முன்தினம் தொடங்கிய மீட்புப் பணி நேற்று வரை தொடர்ந்தது. இந்நிலையில்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நேற்றுமுன்தினம் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் மாநில காவல் துறையைச் சேரந்த கான்ஸ்டபிள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவர்களது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டியை சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து தியோ சாய் கூறுகையில், “நக்சலைட்டுகளின் கோழைத்தனமான ஈவுஇரக்கமற்ற தாக்குதலில்...
இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில். இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
பாரத மண்டபத்தில் இந்த சேவையை தொடங்கி வைத்து அமித் ஷா பேசியதாவது: வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க, இந்திய விசாரணை அமைப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை...
வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 10-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் இந்த 10 நாட்களில் மட்டும் 7 லட்சம்...
கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவரது மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று முன் தினம் காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றனர்....
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாச்சாரத் தொடர்பை வலுப்படுத்த ‘காசி தமிழ்ச் சங்கமம்’ (கேடிஎஸ்-3) 2022-ல் தொடங்கப்பட்டது.
வாராணசியில் ஒரு மாதம் நடைபெற்ற இந்த சங்கமம், பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உருவானது. தனது மக்களவை தொகுதியில் நடைபெற்றதால் இதை பிரதமர் மோடியே தொடக்கி வைத்திருந்தார். அந்த வகையில், தெலுங்கு, சவுராஷ்டிரா சங்கமங்களும் நடைபெற்றன. இதையடுத்து, 2-வது தமிழ்ச் சங்கமம் வாராணசியில் நவம்பர் 2023-ல் 10 நாட்களுக்கு...
மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர். இது நல்ல பலனை அளித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் உள்ளது நிம்புட் கிராமம். இங்குள்ள சுரேஷ் ஜெகதாப் 65 என்ற விவசாயி பல ஆண்டு காலமாக தனது நிலத்தில் காய்கறி மற்றும் பழங்களை விவசாயம் செய்து வந்தார். இங்குள்ள வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையில் உள்ள விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை...
டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப். 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். இஸ்ரோவின் 11-வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வி.நாராயணன் இஸ்ரோ...









