சட்டத்தில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்பதே கிடையாது. இந்த சூழ்ச்சியில் யாரும் சிக்கி கொள்ளக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதன்படி 116-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இன்று தேசிய மாணவர் படையின் (என்சிசி ) தினமாகும். நானும் என்சிசி...
இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை தொழிலதிபர் எலான் மஸ்க் பாராட்டி உள்ளார். அதேநேரம் அமெரிக்க தேர்தல் முறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
‘இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது எப்படி’ என்ற ஒரு ஊடக செய்தித் தலைப்பின் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை நேற்று டேக் செய்துள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான்...
ஜார்க்கண்ட் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்: ராஞ்சியில் 28-ம் தேதி பதவியேற்பு
admin - 0
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். இதையடுத்து ராஞ்சியில் 28-ம் தேதி நடைபெறும் விழாவில் மீண்டும் முதல்வர் பதவியேற்கிறார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் இண்டியா கூட்டணியாக போட்டியிட்டன. பாஜக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இந்த...
பிரிவினைவாதிகளுக்கு மகாராஷ்டிர தேர்தலில் பாடம் புகட்டிய மக்கள்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கருத்து
admin - 0
நாட்டை பிரிக்க நினைப்பவர்களுக்கு மகாராஷ்டிர தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர் என பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்திலிருந்து நேற்று டெல்லி புறப்பட்ட பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். தேர்தல் பிரச்சாரத்தின்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மோடி, மோடி என முழக்கமிட்டத்தை பார்க்க முடிந்தது....
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் வென்ற சுயேட்சை வேட்பாளரின், வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா சந்த்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சிவாஜி பாட்டீல். இவர் போட்டியிட பாஜக சீட் வழங்கவில்லை. இதனால் இவர் இத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். தேர்தல் முடிவு நேற்று முன்தினம் வெளியானபோது சிவாஜி பாட்டீல் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்...
உ.பி.யில் 2027 சட்டப்பேரவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாக 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கருதப்பட்டது. ஆனால் சமாஜ்வாதி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு தொகுதிகளில் கர்ஹாலில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எம்எல்ஏவாக இருந்தார். இங்கு சமாஜ்வாதி சார்பில் லாலு யாதவின் மருமகனும், பாஜக சார்பில் முலாயம் சிங்கின் மருமகனும் போட்டியிட்டனர். இறுதியில் சமாஜ்வாதியின் தேஜ் பிரதாப் யாதவ் வெற்றி பெற்றார்.
மற்றொரு தொகுதியான...
அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல செய்திகள் வெளியாயின. அதானி குழுமத்தின் ஒட்டு மொத்த தொழிலில், அதானி கிரீன் எனர்ஜியின் இந்த ஒப்பந்தம் வெறும் 10 சதவீதம்தான். அதானி குழுமத்தில் மொத்தம் 11 நிறுவனங்கள் உள்ளன. இதில் எந்த நிறுவனமும் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படவில்லை.
அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில்...
மகாராஷ்டிராவின் 75 தொகுதிகளில் நேரடி மோதல்: பாஜக 65 இடத்தில் வெற்றி; 10 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ்
admin - 0
மகாராஷ்டிராவின் 75 தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸும் நேரடியாக மோதின. இதில் 65 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அந்த மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆளும் பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க...
புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்த லில் நோட்டாவுக்கு குறைவான வாக்குகளே பதிவாகின.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம்வெளியானது. இதில், மகாராஷ்டிராவில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (நோட்டா) என 0.75% வாக்காளர்கள் தெரிவித்தனர். இதுபோல ஜார்க்கண்ட் தேர்தலில் 1.32% பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். மகாராஷ்டிர தேர்தலில் 65.02% வாக்குகளும், ஜார்க்கண்டில் 2 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 66.65% வாக்குகளும் பதிவாகின. நோட்டா முறை...
முகலாயர் கால மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: உ.பி. கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு; வாகனங்களுக்கு தீவைப்பு
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். 30 போலீஸார் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை...










