ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை வழக்கு: நீதிமன்றத்தில் கூச்சலால் விசாரணை ஒத்திவைப்பு
admin - 0
மேற்கு வங்க மாநிலம் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் கோபமடைந்த நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 14-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூக வகுப்பு நிறுவனமாக ஐ-பேக் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அண்மையில்...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு உள்ளார்.
கேரளாவில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோயில் கருவறையின் கதவுகள் மற்றும் பீடத்துடன்கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. அதன் பிறகு 4.5 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு...
மத நம்பிக்கை, சட்டப்படி ஏற்பாடுகள் செய்யப்படும்: அர்த்த கும்பமேளா பற்றி உத்தராகண்ட் முதல்வர் உறுதி
admin - 0
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் 2027, ஜனவரி 14 முதல் அர்த்த கும்ப மேளா நடைபெற உள்ளது. இதை பிரம்மாண்டமாக நடத்த மாநில பாஜக அரசு தயாராகி வருகிறது.
இந்நிலையில் அர்த்த கும்பமேளா நாட்களில் உத்தராகண்டின் 100-க்கும் மேற்பட்ட கங்கை படித்துறைகள், முக்கிய இந்து வழிபாட்டுத் தலப்பகுதியில் இந்துக்கள் அல்லாதோருக்கு தடை விதிக்க இந்துத்துவாவினர் வலியுறுத்துகின்றனர். இதுதொடர்பாக 1916-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹரித்வார் நகராட்சி மன்ற துணை விதிகளை கங்கை...
டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆதிஷி, சீக்கியர்கள் வணங்கும் குரு தேஜ் பகதூர் குறித்து அவதூறான கருத்துகளை கூறியதாக ஆளும் பாஜக.வினர் குற்றம் சாட்டினர்.
அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக.வினர் குரல் எழுப்பினர். இதையடுத்து ஆதிஷியின் பேச்சுகள் அடங்கிய வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப சபாநாயகர் விஜயேந்திர குப்தா உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலை பேரவை கூடியது....
கடந்த ஆண்டு நவம்பரில் குரு தேஜ் பகதூரின் 350-வது தியாக தினத்தை முன்னிட்டு, டெல்லி அரசு நடத்திய நிகழ்ச்சி குறித்த சிறப்பு விவாதம் டெல்லி சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், குரு தேஜ் பகதூருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சில கருத்துக்களைக் கூறியதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.
நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும், இந்த விவகாரத்தை எழுப்பிய பாஜக உறுப்பினர்கள்,...
பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்' வலைதளத்தில், ”ஆயிரம் ஆண்டுக்கு முன் 1026 ஜனவரியில் சோமநாதர் கோயில் முதல் தாக்குதலை எதிர்கொண்டது.
1026-ம் ஆண்டு தாக்குதலும், அதன்பின் நடைபெற்ற தாக்குதல்களும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை குறைக்கவோ, சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பிய உணர்வை உடைக்கவோ முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
இக்கோயில் வளாகத்தில் சுயமரியாதை விழா 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதி நாள் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.
கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவன அலுவலகம், அதன் இயக்குநர் வீடு மற்றும் டெல்லியில் உள்ள 4 இடங்கள் உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2020-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக மேற்குவங்கத்தில் ஆன்லைன் விசாரணை நடைமுறை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 58,20,898 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. மேலும் எஸ்ஐஆர் படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாத...
கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடிக்காக நான் தீவிர பிரச்சாரம் செய்தேன். இருமுறை மோடிக்கு உதவி செய்த...
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81.
இதுகுறித்து குடும்ப வட்டாரங்கள் கூறுகையில் “வயோதிகம் காரணமாக நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சுரேஷ் கல்மாடி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் காலமானார்” என்று தெரிவித்தன.
சுரேஷ் கல்மாடியின் உடல் மகாராஷ்டிர மாநிலம் எரண்ட்வானே பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நவி பேட்டையில் உள்ள...
