ஆந்திராவில் மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்களை காட்டு யானைகள் சுற்றிவளைத்து தாக்கின. இதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர மாநிலத்தின் அன்னமைய்யா மாவட்டம், வை.கோட்டா கிராமத்தை சேர்ந்த சுமார் 15 பக்தர்கள், அருகே குண்டாலகோனா வனப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு நேற்று காலை நடந்து சென்றனர். இவர்களில் ஒருவர் தான்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் குறைந்ததால், ஒரு கிராம மக்கள் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக வாக்களித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுக்மா மாவட்டத்தின் கெர்லபெண்டா கிராம மக்கள் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக வாக்களித்துள்ளனர்.
இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறும்போது, “இதுவரை நங்கள் தேர்தலில் வாக்களித்ததே...
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டு மக்களை அமெரிக்க அரசு வெளியேற்றி வருகிறது.
அமெரிக்காவின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒத்துழைப்பு அளித்து வரும் வேளையில் சுமார் 50 இந்தியர்கள் அண்மையில் பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இவர்களில் 12 இந்தியர்கள் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இஸ்தான்புல் வழியாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தனர்.
இதற்குமுன்...
உடல் பருமனை குறைக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: நடிகர் மாதவன் உள்ளிட்ட 10 பேருக்கு பிரதமர் மோடி அழைப்பு
admin - 0
உடல் பருமனை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கினார். இதுதொடர்பாக நடிகர்கள் மாதவன், மோகன் லால், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட 10 பேருக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 119-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வானொலியில் ஒலிபரப்பானது. அப்போது உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார்.
"எட்டு பேரில்...
மகா கும்பமேளா விழாவுக்கு பக்தர்கள் வருவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்: பிரயாக்ராஜ் நகர மக்கள் வேண்டுகோள்
admin - 0
மகா கும்பமேளா விழாவுக்கு பக்தர்கள் வருவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரயாக்ராஜ் நகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தர பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. அங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது.
மகா சிவராத்திரி திருநாளான பிப்ரவரி 26-ம் தேதிவரை,...
உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா மீதான உலகத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், இந்தியாவில் நம்பிக்கையுடன் முதலீடு செய்து வருகின்றனர். சூரிய மின் சக்தி உற்பத்தியில் சூப்பர் பவராக இந்தியா உருவெடுத்திருக்கிறது...
இந்தியாவில் 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் 185 நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. சுமார் 36 வகையான புற்றுநோய்கள் காணப்படுகின்றன. உலகில் அதிக புற்றுநோயாளிகள் வாழும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா 2-ம் இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர்....
டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், ரோஹினி தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லிக்கு...
சம்பல் மசூதி நிர்வாகம் பொது இடத்தை ஆக்கிரமிக்க முயல்வதாக உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 16-ம் நூற்றாண்டில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது. அந்த இடத்தில் கோயில் இருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பயங்கர கலவரம் வெடித்தது....
எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்தில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி வெளிநடப்பு
admin - 0
எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வெளிநடப்பு செய்தார்.
ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று அமராவதியில் தொடங்கியது. பேரவை, மேலவை ஆகியவற்றின் கூட்டுக்கூட்டத்தில் ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பேரவையில் நேற்று உரையாற்றினார்.
இந்நிலையில் பல நாட்களாக பேரவை கூட்டங்களுக்கு வராமல் இருந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட 11 உறுப்பினர்களும் நேற்று காலை அவைக்கு வந்தனர்.
அப்போது ஆளுநர் தனது...










