கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று பெங்களூருவில் உள்ள தேவராஜ் அர்ஸ் பவனில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவை கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா பகல் 12 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே, காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத், தலித் சங்கர்ஷ...
தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த 2 ஆண்டுகளில் 591 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்ததில் பெண் ஐபிஎஸ் அதிகாரி சுமதி முக்கிய பங்காற்றியுள்ளார்.
மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு கெடு விதித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சரணடையும் தீவிரவாதிகளுக்கு மறுவாழ்வு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தெலங்கானாவில் சிறப்பு உளவுப் பிரிவு ஐ.ஜி சுமதி, மாவோயிஸ்ட் கமாண்டர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தற்போதுள்ள நிலைமையை பக்குவமாக எடுத்துக் கூறி அவர்கள் சரணடைந்து இயல்பு...
கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முறையே சுகோய் 30 மற்றும் ரபேல் போர் விமானங்களில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப் படைத் தளத்தை நேற்று வந்தடைந்த முர்மு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரசந்த் ஹெலிகாப்டரில் குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவாவுடன் பயணம் மேற்கொண்டார்.
சுமார் 25 நிமிட பயணத்தின்போது காடிசர் ஏரி மற்றும் ஜெய்சால்மர்...
அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை செயல்படும் வீடியோ காட்சிகளை இந்திய விமானப்படை நேற்று வெளியிட்டது.
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற ‘வாயுசக்தி’ போர் பயிற்சியின் முன்னோட்டமாக இந்த வீடியோ காட்சி விமானப்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. எதிரி நாட்டு விமானங்களை ரேடார் மூலம் கண்டறிந்து, எஸ்-400 ஏவுகணையைச் செலுத்தி அழிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. எதிரிகள் எட்டாத தூரத்தில் இருக்கலாம், ஆனால் எங்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்ற...
“இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம்” – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
admin - 0
இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு மிகவும் அவசியம். முதலீடு, புதுமை கண்டுபிடிப்பில் தனியார் துறை கவனம் செலுத்தி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்க தொடர் நேற்று தொடங்கியது. “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி” என்ற தலைப்பில் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர...
என்சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், “நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது. அதில், நீதித் துறையின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது.
தலைமை...
த கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு 2 வார தடை விதித்து மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ல் வெளியான ‘த கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘த கேரளா ஸ்டோரி 2' தயாரிக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய கோரி ஸ்ரீதேவ் நம்பூதிரி உள்ளிட்டோர் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள்...
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், லக்னோ பல்கலைக் கழகம் செயல்படுகிறது. இதனுள் நசிருதீன் ஹைதர் என்பவரால் 1,800-ம் ஆண்டு கட்டப்பட்டலால் பாராதாரி எனும் கட்டிடம் உள்ளது. இதனை மசூதியாக கருதி பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் இதனுள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
இக்கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 23-ல் லக்னோ மாநகராட்சியால் மூடப்பட்டது. அதே பல்கலையில் உள்ள மற்றொரு மசூதியில் தொழுகை நடத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதை...
காமன் காஸ் அமைப்பு தாக்கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
காமன் காஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, “தேர்தலின்போது கட்சிகள் பண பலத்தை பயன்படுத்துவது ஜனநாயகத்தை பாதிக்கிறது. தேர்தல் செலவின கட்டுப்பாடுகள் இருந்தாலும் அது வேட்பாளருக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது" என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பொதுநல மனு...
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இஸ்ரேல் சென்றார். முதல் நாளில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது இஸ்ரேல் அரசின் உயரிய விருதான நெசெட் பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இஸ்ரேல் அரசுக்கும் யூத மக்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய தனி நபர்களுக்கு நெசெட் பதக்கம் வழங்கப்படுகிறது. இதன்படி இஸ்ரேல், இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நெசெட் வழங்கப்பட்டது.
இது குறித்து அவர்...










