தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் இறந்துள்ளார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய ஜட்செர்லா அரசு மருத்துவமனையின் பிணவறையில் கொண்டு சென்று வைக்கப்பட்டது.
இந்நிலையில், காலையில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறி இருந்ததை அறிந்த மருத்துவர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த இளைஞரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து...
ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை: இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
admin - 0
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் சுல்தான் மற்றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தனது கவலையைத் தெரிவித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, திங்கள்கிழமை அன்று சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஜோர்டான்...
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றம்சாட்டி, ஈரானில் கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதையடுத்து ஈரானும் பல்வேறு அமெரிக்க விமான தளங்களை குறிவைத்து பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்நிலையில் டெஹ்ரான் நகரிலுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இந்தியத் தூதரகம் நேற்று மாற்றியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள தூதரக அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதுகுறித்து டெஹ்ரான் நகரில் செயல்பட்டு...
கடந்த 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக தலைவர்களில் பிரதமர் சாதனை படைத்தார்.
இந்நிலையில் யூடியூபில் அதிகம் பின் தொடர்வோரை கொண்ட தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடியின் பெயரிலான யூடியூப் சேனல்,...
போர்ப் பதற்றத்துக்கு இடையே 149 பயணிகளுடன் துபாயில் இருந்து டெல்லி வந்தடைந்த முதல் ஏர் இந்தியா விமானம்
admin - 0
போர்ப் பதற்றத்துக்கு இடையே துபாயிலிருந்து டெல்லிக்கு நேற்று முதலாவது ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது.
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா ஆகிய நாடுகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால் பலர் தாய் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த போர்ப்...
அதிக போக்குவரத்து உள்ள சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களை இணைக்க 5, 6-வது ரயில் பாதைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி, ஹவுரா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய பெருநகரங்களை இணைக்கும் அதிக போக்குவரத்து கொண்ட ரயில் பாதைகளில் (எச்டிஎன்) 5, 6-வது ரயில் பாதைகளை அமைக்கும் திட்டம் தொடர்பான ஆலோசனையை ரயில்வே அமைச்சகம் அண்மையில் தொடங்கியுள்ளது. இவ்வாறு 5, 6-வது ரயில் பாதைகள்...
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் ராணுவப் பார்வையாளர்கள் குழுவின் தலைமையகம் முன் கருப்பு கொடி ஏந்தியபடி திரண்ட மக்கள், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதுபோல பண்டிபோரா பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே வேலை நிறுத்த போராட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில்...
மகாராஷ்டிர மாநிலம், கட்டோல் பகுதி, ரவுல்கானில் சுரங்க, தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக எஸ்பிஎல் தொழிற்சாலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இன்று காலை தொழிற்சாலை வளாகத்தில் உள்ள டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் காலை 7 மணி முதல் காலை 7.15...
“நியாயமான தீர்ப்புகளை வழங்கினால் மட்டுமே நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கூடும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்
admin - 0
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி எம். ரவிச்சந்திரா உட்பட பல உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், இரவு திருமலையில் தங்கிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நேற்று காலை தனது குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தரிசனம் செய்த பின்னர், ரங்க நாயக மண்டபத்தில் தலைமை...
விமானங்கள் ரத்து காரணமாக துபாயில் சிக்கிய நிலையில் நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல்
admin - 0
ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், துபாயில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை சோனல் சவுகான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் பதிலடி தாக்குதலில் இறங்கியது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உட்பட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்...










