Google search engine
வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் மேலும் கூறி​யுள்​ள​தாவது: இது​வரை, மாநிலத்​தில் 10 லட்​சம் இளைஞர்​களுக்கு அரசு வேலைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன, ஒட்​டுமொத்த அளவில் 39 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் இலக்கு நிச்​சய​மாக எட்​டப்​படும். இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்​டு​களுக்கு (2025-2030) ஒரு...
சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. சட்ட விரோதமான சூதாட்ட செயலிக்கு நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் விளம்பரம் செய்ததாக தெலங்கானா போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்படி ராணா தக்குபாட்டி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மன்ச்சு லட்சுமி, பிரனீதா, நிதி அகர்வால்,...
 மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல போக்குவரத்து அதிகாரி ஹேமங்கி பாட்டீல் பேசியதாவது: பள்ளிகளில் மாணவர்களுக்கு தினசரி கல்வியின் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பிக்கப்பட வேண்டும். இது விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும். மேலும் சாலையை பொறுப்புடன் பயன்படுத்தும் கலாச்சாரத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தும். பெற்றோர்களை விட ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் கேட்கின்றனர். குழந்தைகள் இளம் வயதிலேயே...
ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டம் சூரத்கர் நகரில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. இங்கிருந்து ஜாகுவார் போர் விமானம் நேற்று முன்தினம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. இந்த விமானம் சுருமாவட்டம், பனோடா கிராமத்துக்கு அருகில் திடீரென வயலில் விழுந்து நொறுங்கியது. இதில் விமான பாகங்கள் தீப்பற்றி எரிந்ததில் லோகேந்திர சிங் சிந்து (31), ரிஷி ராஜ் சிங் (23) ஆகிய இரு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் லோகேந்திர சிங்,...
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது: நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது....
உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்​பில் முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்​துக்கு திரும்​பும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி நடை​பெற்​றது. அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணைக்​குப் பிறகு, பல்​ராம்​பூரை சேர்ந்த ஜுங்​கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்​றும் நெருங்​கிய நண்​பர் நீத்து நவீன் ரொஹ​ரா(எ) நஸ்​ரின் உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்​கில் ஏடிஎஸ் படை​யினர்...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023-ல் நிராகரிக்கப்பட்டது. தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை...
​முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்​தியாயம் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக மலை​யாள நாளிதழில் அவர் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி நாட்​டில் அவசர நிலையை அமல் செய்​தார். கடந்த 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை 21 மாதங்​கள்...
மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்​வர் ஒமர் அப்​துல்லா நேற்று தொடங்கி வைத்தார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: 2025-ம் ஆண்டு எங்​களுக்கு எளி​தான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்​காம் தாக்​குதலுக்கு முன்பு மற்​றும் பின்பு என 2 பகு​தி​களாகப் பிரிக்​கலாம். பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு ஜம்​மு-​காஷ்மீரில் தற்​போது சுற்​றுலா மீண்​டும் எழுச்சி பெற்று வரு​கிறது. மேற்கு வங்க மக்​கள் ஜம்மு...
 மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு தொழிலாளர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ்...