Google search engine
 நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த மாநில அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. கேரள மாநிலத்​தில் ஆண்​டு​தோறும் கோழிக்​கோடு, பாலக்​காடு, மலப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தொடர்ச்​சி​யாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வரு​கிறது. இந்​நிலை​யில் பாலக்​காடு மாவட்​டம் மன்​னார்​காடு அருகே குமரமபுத்​தூர் பகு​தியை சேர்ந்த 57 வயது நபர் ஒரு​வர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்​சலால்...
உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார். ஜலந்தர் - பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து...
ஒடிசா மாநிலத்தில் தனது பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு உயிரிழந்தார். 20 வயதான அந்த மாணவி, பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த கல்லூரியின் கல்​வி​யியல் துறை தலை​வ​ராக பணி​யாற்​றிய​ சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக...
 மராத்திக்கு எதிராக பேசிய ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய சிவசேனா (உத்தவ் அணி ) தொண்டர்கள் அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விரார் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வந்தார். அவர் சில நாட்களுக்கு முன் மராத்தி, மகாராஷ்டிரா, மராத்தி தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, விரார் ரயில் நிலையம் அருகே நடுரோட்டில், மராத்தி குறித்து...
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டம் சங்காரியா நகரைச் சேர்ந்தவர் தாராசந்த் அகர்வால் (71). இவருடன் பிறந்தவர்கள் 8 பேர். இதில் 4-வதாக பிறந்த அகர்வால் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர் வங்கியில் (இப்போது எஸ்பிஐ) துணைப் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். 38 ஆண்டு பணிக் காலத்துக்குப் பிறகு கடந்த 2014-ல் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மனைவி உயிரிழந்ததால் அகர்வால் கடும் மன உளைச்சலுக்கு...
கர்​நாட​கா​வில் அடர் வனப்​பகு​தி​யில் உள்ள குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த பெண் ஒரு​வர் தனது 2 மகள்​களு​டன் தங்கி இருந்​தார். அவரை அம்​மாநில போலீ​ஸார் பத்​திர​மாக மீட்​டனர். கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டம் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்​துள்​ளது. அங்​குள்ள வனப்​பகு​தி​யில் சுற்​றுலாப் பயணி​கள் சட்​ட​விரோத​மாக மலை​யேற்​றம், சவாரி ஆகிய​வற்​றில் ஈடு​படு​வ​தாக போலீஸாருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்​வாளர் தர் தலை​மையி​லான காவல் துறை​யினர் கடந்த...
ஏர் இந்​தியா விமான விபத்​தில் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பிய விஸ்​வாஸ் குமார் இன்​னும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள முடி​யாமல் தவிக்​கிறார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்​கியது. இதில் விமானப் பயணி​கள், ஊழியர்​கள் 241 பேர் உயி​ரிழந்​தனர். அத்​துடன் விமானம் மருத்​துவ கல்​லூரி விடுதி மீது விழுந்​த​தில் அங்​கிருந்த முதுகலை மாணவர்​கள்...
ஒடிசா மாநிலம் புவனேஸ்​வரில் உள்ள கல்​லூரி ஒன்​றில், கல்​வி​யியல் துறை் தலை​வ​ராக பணி​யாற்​றிய​வர் சமிரா குமார் சாகு. இவர் மாணவி ஒரு​வருக்கு பாலி​யல் தொந்​தரவு அளித்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இது குறித்து கல்​லூரி​யின் புகார் குழு​வில் மாணவி புகார் அளித்​தார். இது குறித்து உடனடி நடவடிக்கை எது​வும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் நேற்று முன்​தினம் தீக்​குளிக்க முயன்​றார். உடனே அரு​கில் இருந்​தவர்​கள் மாண​வியை காப்​பாற்றி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். மாணவி புகார்...
நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடை​பெற உள்ளது. இந்த கூட்​டத்​தொடரில் எவ்​வாறு செயல்​படு​வது, எழுப்ப வேண்​டிய முக்​கிய பிரச்​சினை​கள் குறித்து விவா​திக்க காங்கிரஸ் எம்​.பி.க்​களு​டன் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்த உள்​ளார். ஜம்மு - காஷ்மீரில் பஹல்​காம் சுற்றுலா தளத்தில் தீவிர​வாதிகள் நடத்திய தாக்​குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்​திய அரசு...
குவாஹாட்டி: அசாம் ஐக்கிய சுதந்திர முன்னணி-இண்டிபென்டன்ட் (உல்பா-ஐ), அசாம் மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்து கோரி வருகிறது. மத்திய அரசால் தடை செய்யப் பட்ட இந்த அமைப்பின் கிழக்கு தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ளது. இதன் மீது இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் மெதி உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் உல்பா-ஐ அமைப்பு நேற்று...