Google search engine
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் தண்டேவாடா - பீஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் - மாவோயிஸ்ட் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு 3 மாவோயிஸ்ட்களின் உடல்களை பாதுகாப்பு படையினர் அங்கிருந்து மீட்டனர். மேலும் ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றினர். மோதலில் இறந்த 3 மாவோயிஸ்ட்கள்...
நாட்டின் முதல் ஜவுளி இயந்திர பூங்கா உத்தரபிரதேசத்தின் கான்பூரில் அமைகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் ஜவுளி இயந்திரங்கள் இனி இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன. மத்திய ஜவுளித் துறை சார்பில் மாநில அரசுகளுடன் இணைந்து பி.எம். மித்ரா பூங்காங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை, தமிழ்நாடு, உ.பி. உள்ளிட்ட 7 மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய ஜவுளிச் சந்தை, 350 பில்லியன் டாலர்களாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார்...
தெலங்கானாக மாநில அமைச்சராக நடிகையும், காங்கிரஸ் கட்சி மேலவை உறுப்பினருமான விஜயசாந்தி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தில் சமீபத்தில் எம்எல்சி (மேலவை) தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வரும் ஏப்ரல் 3-ம் தேதி அமைச்சரவை விஸ்தரிப்பு நடைபெற உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் பல மூத்த கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென அக்கட்சியின் மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில்...
ஆப்பிரிக்க கடல் பகுதியில் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் பணியாற்றும் 2 தமிழக இன்ஜினீயர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு ரூபிஸ் எனர்ஜியாண்ட் என்ற சரக்கு கப்பல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ரூபிஸ் எனர்ஜியாண்ட் நிறுவனத்தின் பிட்டு ரிவர் என்ற சரக்கு...
டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, 2026-ல்​ தமிழகத்​தில்​ தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்​சி அமை​யும்​ என்​று பதி​விட்​டுள்​ளார்​. அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி நேற்​று சென்​னை​யில்​ இருந்​து வி​மானம்​ மூலம் டெல்​லி சென்​றார்​. கடந்​த மாதம் சென்​னை​யில்​ இருந்​து காணொலி வாயி​லாக டெல்​லி​யில்​ திறந்​து​வைத்​த அதி​முக அலு​வல​கத்​தை அவர்​ பார்​வை​யிட்​டார்​....
கடந்த 2024 மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் திரட்டிய பணத்தை முழுமையாக செலவிடவில்லை. இதனால் பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 6 கட்சிகளின் இருப்பு நிதி தேர்தலின் தொடக்கத்தில் இருந்ததை விட தேர்தலின் முடிவில் ரூ.4,300 அதிகரித்துள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. இந்த அறிக்கைகளை காமன்வெல்த் மனித உரிமைகளுக்கான நடவடிக்கை (சிஎப்ஆர்ஐ) என்ற தன்னார்வ அமைப்பு பகுப்பாய்வு செய்து...
கல்வி நிறுவனங்களில் இருந்து ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை வெளியேற்ற வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இண்டியா கூட்டணியை சார்ந்த மாணவர் அமைப்புகள் சார்பில் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு பரிந்துரைக்கும் நபர்கள் மட்டுமே பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளன. மகா கும்பமேளா குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்....
ஆம் ஆத்மி ஆட்சி குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றியது. ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த பிப்ரவரி 20-ம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். இதைத்...
திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல்யாத்திரை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலைக்கு இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுவதை எதிர்த்தும், திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வலியுறுத்தியும் சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி சார்பில் வடசென்னை மாவட்ட...
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை, எனவே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற காட்டமான விமர்சனத்தை பிரபல அரசியல் வியூக நிபுணரும், ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நிதிஷ் குமாரின் உடல்நிலை குறித்து முதன்முதலாக கருத்து தெரிவித்தவர் அவருடன் கூட்டணியில் இருந்த சுஷில் குமார் மோடி. அன்று முதல் பிஹார் அமைச்சர்கள்...