வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்யாமல் விவாதத்தில் ஈடுபடவும், வாக்கெடுப்புக்கு வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படின் சூழலைப் பொருத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை...
‘புகார் எழாதவரை வக்பு சொத்து உரிமையில் மாற்றம் இருக்காது’ – மசோதாவில் முக்கிய அம்சம் சேர்ப்பு?
admin - 0
வக்பு சொத்துக்களில் சர்ச்சை எழாதவரை அல்லது அது அரசு சொத்தாக இல்லாதவரை அந்த சொத்துக்களின் உரிமையில் மாற்றம் இருக்காது எனும் சரத்து வக்பு திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படின் சூழலைப் பொருத்து கூடுதல் நேரம்...
கடலோர பகுதிகளில் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் கடலோர பகுதிகளில் சுரங்கம் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை...
குஜராத் மாநிலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான வைர தொழிலாளர்கள் நேற்று மாபெரும் பேரணி நடத்தினர்.
உலக அளவில் வைர தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதுகுஜராத் மாநிலத்தின் சூரத் நகரம். வைரத்தை நறுக்குபவர்கள், பட்டை தீட்டுபவர்கள் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த துறையை நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் வைர தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக தொழிலாளர்களுக்கான ஊதியம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது...
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக நிதி திவாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
உத்தர பிரதேசத்தின் வாராணசியை சேர்ந்தவர் நிதி திவாரி. முதலில் வாராணசி வணிக வரித் துறை துணை ஆணையராக அவர் பணியாற்றி வந்தார். அந்த பணியில் இருந்து கொண்டே குடிமைத் பணித் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றார்.
கடந்த 2014-ம் ஆண்டில் இந்திய வெளியுறவுத் துறையில் நிதி திவாரி...
உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவாலுக்கு இந்தியா தீர்வு வழங்குகிறது: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் புகழாரம்
admin - 0
கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி உதவி செய்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் புகழாரம் சூட்டி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவில் அரசு முறை பயணம் செய்தார். அப்போது சசி தரூர் கூறும்போது, “பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமையும். நமது நாட்டுக்கு பல்வேறு நன்மைகள்...
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஏழுமலையான் கோயிலில் முஸ்லிம்கள் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று முன்தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதுபோல் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள தேவுண்ணி கடப்பா ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலிலும்...
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல் யத்னால் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் நகர தொகுதியின் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசனகவுடா பாட்டீல் யத்னால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பீஜாப்பூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பசனகவுடா...
வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் கறுப்பு பட்டை அணிந்து ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வக்பு சட்டத் திருத்த சட்ட மசோதாவுக்கு பெரும்பான்மையான முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ரம்ஜான் திருநாளான நேற்று கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹஜ் துறை அமைச்சர் கே.ரஹ்மான் கான் ஆகியோர் நேற்று பெங்களூருவில்...
நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்க முயற்சி: மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றச்சாட்டு
admin - 0
“நாட்டின் கல்வி முறையை வேட்டையாட மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று ‘சி’-க்களைப் பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் கல்வித் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்தால் 3 கொள்கைகளின் அடிப்படையில் பாஜக அரசு செயல்படுவது தெளிவாகும். மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பது, கல்வித் அதிகரித்து வணிக மயமாக்குவது, பாடத் திட்டங்கள், கல்வி...










