Google search engine
மத்​திய நிதித்​துறை அமைச்​சகம் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: பொதுத்​துறை காப்​பீடு நிறு​வனங்​களின் ஊழியர்​கள் மற்​றும ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​படும். இதற்கு ரூ.8,170.30 கோடி செல​வாகும். நபார்டு வங்கி ஊழியர்​கள் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்​கான ஊதி​யம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​படும். இதன் மூலம் ஆண்​டுக்கு கூடு​தலாக சுமார் ரூ.170 கோடி செல​வாகும். நிலு​வைத் தொகை​யாக மட்​டும் சுமார்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இங்கு சிஎஸ்ஐஆர்- என்ஐஐஎஸ்டி புதுமை கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு மையத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பி.எம்.ஸ்வாநிதி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயனாளிகள் பலருக்கு கடன்கள் மற்றும் கடன் அட்டைகளை வழங்கினார். ஸ்ரீ சித்ரா திருநல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நவீன ரேடியோ அறுவை சிகிச்சை மையத்துக்கும் அவர்...
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இது குறித்து ஜம்மு காவல்துறை ஐ.ஜி பீம் சென் துதி கூறும்போது, ‘‘கதுவா மாவட்டத்தில் உள்ள பிலாவர் பகுதியில் ஜம்மு காஷ்மீர் போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார், ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உஸ்மான் என தெரியவந்தது. அவரிடமிருந்து எம்4 தானியங்கி துப்பாக்கி உட்பட ஏராளமான...
செல்​போன் செயலி மூலம் மும்​பையைச் சேர்ந்த தொழில​திபர் ஒரு​வரிடம் ரூ.11 கோடி மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது. தெற்கு மும்பை சர்ச்​கேட் பகு​தி​யைச் சேர்ந்த 68 வயது தொழில​திபர் பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்ய திட்​ட​மிட்டுள்ளார். அப்​போது சமூக வலை​தளத்​தில் விளம்​பரம் ஒன்றை அவர் பார்த்​துள்​ளார். அதனைத் தொடர்ந்து மோகன் சர்மா என்ற பெயரில் வாட்​ஸ்​அப்​பில் பேசிய ஒரு​வர் பங்​குச் சந்தை ஆலோசக​ராக அறி​முக​மாகி​யுள்​ளார். ‘‘டிரேடர் டைட்​டன் விஐபி 46” என்ற வாட்​ஸ்​அப் குழு​வில்...
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயி​லில் ராமர் சிலை, கடந்த ஜனவரி 22, 2024-ல் பிராண பிர​திஷ்டை செய்​யப்​பட்டு 2 வருடங்​கள் நிறைவு பெற்​றுள்​ளன. இதையெட்​டி, 286 கிலோ எடை​யுள்ள தனுசு (வில்) நேற்று அயோத்​திக்கு வந்து சேர்ந்தது. இது, ராமர் கோயிலுக்கு காணிக்​கை​யாக, ஒடி​சா​வின் சனாதன ஜாக்​ரன் மஞ்ச் சார்​பில் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இது, தமிழ்​நாட்​டின் கோயில் நகர​மான காஞ்​சிபுரத்​தின் 48 பெண் கைவினை கலைஞர்​களால் பஞ்​சலோகத்​தில் செய்​யப்​பட்​ட​தாகும்....
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலா​ளர்​கள் பங்​கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்​றது. இதில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது: "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தி​யளிப்​புச் சட்​டத்​தின் நோக்​கம் ஏழைகளுக்கு உரிமை​களை வழங்​கு​வ​தாக இருந்​தது. இத்​திட்​டத்​தின் அடிப்படையே ‘உரிமை’ என்ற வார்த்​தை​தான். தற்​போது புதிய ஊரக வேலை சட்டத்தின் மூலம் உரிமை என்ற அடிப்​படை...
குஜ​ராத் மாநிலம், சூரத் நகரின் தட்​கேஷ்வர் பகு​தி​யில் 11 மீட்​டர் உயரத்​தில் 11 லட்​சம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட மேல்​நிலை நீர்த்​தேக்க தொட்டி கட்​டப்​பட்​டது. 14 கிராமங்​களுக்கு குடிநீர் வழங்கு​வதற்​காக ரூ.21 கோடி செல​வில் இது கட்​டப்​பட்​டது. இந்​நிலை​யில் திறக்​கப்​படு​வதற்கு முன் சோதனை முயற்​சி​யாக, அண்​மை​யில் இதில் சுமார் 9 லட்​சம் லிட்​டர் குடிநீர் நிரப்​பப்​பட்​டது. அப்​போது குடிநீர் தொட்டி இடிந்து விழுந்​தது. இது தொடர்​பாக ஒப்​பந்​த​தா​ரர்​கள், 2 அதி​காரி​கள்...
கேரள சட்​டப்​பேர​வைக்கு ஓரிரு மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி இன்று கேரளா செல்​கிறார். இந்​தப் பயணத்​தின்​போது, திருவனந்த​புரத்​தில் உள்ள சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்டி வளாகத்​தில் அமைய​வுள்ள புத்​தாக்​கம் மற்​றும் தொழில்​முனை​வோர் மையத்துக்கு அடிக்​கல் நாட்ட உள்​ளார். அத்​துடன் 3 அம்​ரித் பாரத் எக்​ஸ்​பிரஸ் உட்பட 4 புதிய ரயில் சேவை​களை​யும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இது த​விர, திரு​வனந்​த​புரத்​தில் ஒரு நவீன தபால் நிலையத்​தை​யும்...
மும்பை மேயர் பதவி, பொதுப் பிரிவை சேர்ந்த மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்ளது. மகா​ராஷ்டி​ரா​வில் 29 மாநக​ராட்​சிகளுக்கு கடந்த 15ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. இதில் 17 மாநக​ராட்​சிகளை பாஜக தனித்து கைப்​பற்​றியது. மும்பை உட்பட மேலும் 8 மாநக​ராட்​சிகளை பாஜக, சிவசேனா (ஷிண்​டே) அடங்​கிய மகா​யுதி கூட்​டணி கைப்பற்​றியது. கடந்த 1998-ம் ஆண்டு முதல் மாநக​ராட்சி தேர்​தல் முடிவு​கள் வெளி​யான பிறகு, ஒவ்​வொரு மாநக​ராட்​சி​யிலும் தனித்​தனி​யாக குலுக்​கல் நடத்​தப்​படும். இதன்...
பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு கூட்டத்தில் பேசும்போது, ”காங்கிரஸ் கட்சியில் தலித் மக்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் தேவை” என்றார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் பரவியது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், ”எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி விவகாரங்களை எழுப்பும் போது மக்கள் தொகைக்கு ஏற்ப சாதி விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை என ராகுல் காந்தி பேசுகிறார். ராகுல்...