Google search engine
உத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சம்பல் நகரில் புதிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் வீசிய செங்கற்களை கொண்டு இது கட்டப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் பழமையான ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த நவம்பர் 24-ம் தேதி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் 5 பேர் உயிரிழந்தனர். வன்முறையாளர்கள் கல்வீசி...
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஜேஇஇ தேர்வை தவறவிட்டுவிட்டதாக 30 மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெண்டுர்தி ஏஐ டிஜிட்டல் ஜேஇ அட்வான்ஸ் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 30 மாணவர்கள் நேற்று (ஏப்.07) காலை என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய்...
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்துக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு பணி நியமனங்கள் நடைபெற்றன. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாகவும், தலா ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட 25,753 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வேலை...
தேவாலய நில விவகாரத்தை எழுப்பிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கு கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க தேவாலயங்கள், அரசு சாரா நிலங்களை அதிகளவில் வைத்துள்ளன என ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்கனைஸர் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘ வக்பு...
வக்பு திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து, வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. வக்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையின குழு நீண்ட ஆய்வுக்குப் பிறகு தனது பரிந்துரையை வழங்கியது. இதன் அடிப்படையில் வக்பு திருத்த மசோதா...
ஓமனுக்கு அருகே மீன்பிடி படகில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட பாகிஸ்தான் மீனவர் ஒருவருக்கு இந்திய கடற்படை ஓடோடிச் சென்று அவரச மருத்துவ உதவியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஓமன் கடற்கரைக்கு கிழக்கே சுமார் 350 கடல் மைல் தொலைவில் ஈரானிய படகு ஒன்று பாதிப்பில் உள்ளதாக தகவல் கிடைத்தது. படகின் குழுவினர் இயந்திரத்தில் வேலை செய்தபோது ஒருவருக்கு விரல்களில் பலத்த காயம்...
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. அவரது மகன் ஆனந்த் அம்பானி. இவர் தனது 30 பிறந்தநாளையொட்டி துவாரகாதீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கான பாதயாத்திரையை குஜராத்தின் ஜாம் நகரில் இருந்து கடந்த மார்ச் 29-ம் தேதி தொடங்கினார். அவரது 170 கி.மீ. நடைப் பயணம் 8 நாட்களுக்குப் பிறகு நேற்று நிறைவடைந்தது. அப்போது தன்னுடன் ஆன்மிக பயணத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆனந்த் நன்றி...
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்து, குறிப்பிட்ட தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு கொடூர தண்டனைகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சில ஊழியர்களை கழுத்தில் சங்கிலியால் கட்டி இழுத்து, நாய்களை போன்று நடக்க வைத்திருப்பது...
ராம நவமி தினத்தில் அயோத்தி பால ராமர் நெற்றியில் சூரிய ஒளி திலகமிடப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி உத்தர பிரதேசம் அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. தற்போது நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் பால ராமரை வழிபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் நேற்று ராம நவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை...
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தால், 7,000 கிராமங்களில் விதவைகளுக்கு எதிரான பாகுபாடான தீய வழக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 27,000 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. கோல்காபூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வத் கிராம பஞ்சாயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கணவன் இறந்தால் பெண்களின் தாலி, மெட்டி போன்றவற்றை அகற்றுவது, குங்குமத்தை நீக்குவது, வளையல்களை உடைப்பது போன்ற சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சமூக சீர்திருத்தத்தை பல கிராமங்கள் பின்பற்றத் தொடங்கின....