Google search engine
நாசிக் நகரிலுள்ள தர்கா இடிக்கப்பட்டபோது நடந்த வன்முறைச் சம்பவத்தில் 21 போலீஸார் காயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் காத்தேகள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் சத்பீர் தர்கா என்ற பெயரில் தர்கா உள்ளது. இதையடுத்து அந்த தர்காவை இடித்து அகற்ற நாசிக் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், தர்காவை இடித்து அகற்றலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து...
குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டம், தரம்பூரி அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 30 மாணவ, மாணவியரும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். இதற்கு சற்று முன்னதாக பள்ளிக்கு வந்த மதிய உணவு...
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 2-ம் தேதி மக்களவையில் வக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். கடந்த 8-ம் தேதி வக்பு திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 1937ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் இருந்து நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமெிடெட்(ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை ரூ.5 லட்சம் முதலீட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி,...
நீதித் துறையும் நாடாளுமன்றமும் பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டும். ஒருவேளை நீதித் துறையில் அரசு தலையிட்டால் என்னவாகும்? இரு தரப்புகளுக்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பல்வேறு ஆய்வுகள், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த...
சர்வதேச சைபர் மோசடி தொடர்பாக 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க சிபிஐ தரப்பில் 'ஆபரேஷன் சக்ரா' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி அனைத்து மாநில காவல் துறைகள் மற்றும் சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், அமெரிக்காவின் எப்பிஐ, கனடா காவல் துறை, ஆஸ்திரேலிய காவல் துறை, பல்வேறு தனியார் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ செயல்பட்டு...
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பதவி அளிக்கப்பட உள்ளது. கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பிஜேஒய்எம்) தேசிய தலைவராக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. கர்நாடகா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை (40). தனது பணியில் 'கர்நாடகா சிங்கம்’ என பெயரும் பெற்றிருந்தார். கடந்த 2017-ல் திடீரென பாஜகவில் இணைந்தவருக்கு எவரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல்...
திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதாக கூறிய கருணாகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி எஸ்.பி.யிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசாலையில் கடந்த 3 மாதங்களில் உடல்நலம் குன்றியும், சரிவர தீவனம் வழங்கப்படாமலும் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் கன்றுகள் இறந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர்...
சொந்த மண்​ணிலேயே நாங்​கள் அகதி​களாக மாறி வசிக்க வேண்​டிய நிலை வந்​து​விட்​டது என்று முர்​ஷி​தா​பாத் நகரத்​தில் வசிக்​கும் பெண்​கள் முறை​யிட்டு வரு​கின்​றனர். வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து மேற்கு வங்க மாநிலத்​தின் பல்​வேறு இடங்​களில் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் முர்​ஷி​தா​பாத்​தில் கடந்த வாரம் நடந்த போராட்​டம், வன்​முறைச் சம்​பவங்​களில் முடிந்​தது. இந்த வன்​முறைச் சம்​பவங்​களில் 3 பேர் உயி​ரிழந்​தனர். வன்​முறைச் நிகழ்ந்தபோது வீட்​டின் உள்ளே ஒளிந்து இருந்த...
சகோதரர்கள் இருவரும் பைக்கின் பின்புறம் ஒரு கோழிக்கூண்டுக்குள் அமர்ந்து தந்தையுடன் ஜாலியாக பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒரு தந்தை பைக் ஓட்டி செல்கிறார். அந்த பைக்கின் பின்புறம் கோழிக்கூண்டுக்குள் தனது இரு மகன்களையும் உட்கார வைத்துக்கொண்டு அழைத்து செல்கிறார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் 33 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ ஹைதராபாத் நாகோல் அருகே உள்ள பண்ட்ல கூடா எனும்...