கோழிக்கூண்டில் அமர்ந்து தந்தை பைக்கில் பயணித்த மகன்கள்

0
32

சகோதரர்கள் இருவரும் பைக்கின் பின்புறம் ஒரு கோழிக்கூண்டுக்குள் அமர்ந்து தந்தையுடன் ஜாலியாக பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு தந்தை பைக் ஓட்டி செல்கிறார். அந்த பைக்கின் பின்புறம் கோழிக்கூண்டுக்குள் தனது இரு மகன்களையும் உட்கார வைத்துக்கொண்டு அழைத்து செல்கிறார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் 33 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த வீடியோ ஹைதராபாத் நாகோல் அருகே உள்ள பண்ட்ல கூடா எனும் இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கோழிகளை அடைத்து கொண்டு செல்லும் கூண்டில், தனது இரு மகன்களையும் உட்கார வைத்து தந்தை அழைத்து செல்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலரோ இது போன்ற மேதாவிகள் எல்லாம் இந்தியாவில் தான் இருப்பார்களோ என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார். பலர் நல்ல ஐடியாவா இருக்கே என பாராட்டி உள்ளனர். மேலும் சிலர் இது ஆபத்தான பயணம். அசாம்பாவிதம் ஏதும் நடந்து விட்டால் நிலைமை என்னாகும் ? என கேள்வி கேட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here