ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.
அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அந்தப் பிரிவில் மருத்துவ சிகிச்சையில் இருந்த நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர், அந்த...
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக இளைஞரை கொண்டாடிய பிஹார் கிராம மக்கள் – வேறு ஒருவர் என தெரிந்ததால் ஏமாற்றம்
admin - 0
பிஹாரின் ஷேக்புரா மாவட்டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், 440-வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளதாக கிராம மக்களிடம் ரஞ்சித் குமார் கூறிஉள்ளார்.
இதையடுத்து கிராமமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இத்தகவல் சமூக ஊடகத்திலும் பரவிய நிலையில் ஷேக்புரா தொகுதி முன்னாள் ஆர்ஜேடிஎம்எல்ஏ விஜய் சாம்ராட் தனது ஆதரவாளர்களுடன் ரஞ்சித் குமார் வீட்டுக்கு வந்தார். பூங்கொத்தும்...
ஒடிசா மாநிலம் பஸ்தாரா- கும்சர் பகுதியில் உள்ள கலாஹண்டி, ராயகடா மற்றும் கந்தமால் மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் இருந்து வந்தது. இங்கு பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். மாவோயிஸ்ட்கள் சரணடைவதையும் ஊக்குவித்து வந்தனர்.
இந்நிலையில் இப்பகுதியில் மண்டல கமிட்டி உறுப்பினராக இருந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவர் நகுல் உட்பட 11 மாவோயிஸ்ட்கள் மாநில டிஜிபி குரானியா முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். இவரை பற்றி...
ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தரப்பில் 3 பேர், பிஜு ஜனதா தளம் சார்பில் 2 பேர் என மொத்தம் 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஒரு வேட்பாளர் வெற்றி பெற 30 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது. இதன் மூலம் 2 எம்பிக்களை பாஜகவால் தேர்வு செய்ய...
கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது மார்க்சிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த வழக்கத்தை இடது ஜனநாயக முன்னணி கடந்த முறை தகர்த்தெறிந்து தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி...
மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கும்: உச்ச நீதிமன்றம் கருத்து
admin - 0
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால், பெண்களை யாரும் வேலைக்கு தேர்வு செய்ய மாட்டார்கள் என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொது நல மனுவை தள்ளுபடி செய்தது.
பெண்களின் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது தொடர்பாக சைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த பொதுநல மனுவில், மாதவிடாயின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, மாதவிடாய் விடுப்புடன் கூடிய ஊதியமும், மாணவிகளுக்கு விடுமுறையும்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று சமர்ப்பித்தன.
கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்குவங்கம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்களில்...
பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் பிரபல ரவுடி சிவ பிரகாஷ் (40) கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கிருஷ்ணராஜபுரம் பாஜக எம்எல்ஏ பைரத்தி பசவராஜை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஜாமீன் கோரி, அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் கஜனன் பட், பைரத்தி பசவராஜுக்கு ரூ.2 லட்சம் பிணையத் தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். வழக்கு தொடர்புடையவர்களை அச்சுறுத்தவோ, சாட்சியங்களை கலைக்கவோ...
நடப்பு நிதியாண்டில் கூடுத லாக ரூ.2.81 லட்சம் கோடி செலவினத்துக்கு அனுமதி கோரி 2-ம் கட்ட துணை மானியக் கோரிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதில் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் சூழல் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிலைத்தன்மை நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது துணை மானிய கோரிக்கை காரணமாக 2025-26 பட்ஜெட்...
ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. பேரவையில் ஆளும் பாஜக 2 இடங்களிலும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் ஓரிடத்திலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
நான்காவது இடத்துக்கு பாஜக ஆதரவுடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திலீப் ரே மற்றும் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே போட்டி நிலவுகிறது. 14 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி பிஜு...










