வி.ஜே.சித்து இயக்கி, நாயகனாக நடித்து வரும் ‘டயங்கரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி வரும் படம் ‘டயங்கரம்’. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இன்னும் இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘டயங்கரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘டயங்கரம்’ படத்தினை வி.ஜே.சித்து இயக்கி, நாயகனாக நடித்து வருகிறார். இதில் நட்டி, காளி...
நலன் குமாரசாமி தனது அடுத்த படங்களின் திட்டம் என்ன என்பது குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
நீண்ட மாதங்கள் கழித்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. ஆனால், பொங்கல் விடுமுறை என்பதால் படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனிடையே தனது அடுத்த படங்களின் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் நலன் குமாரசாமி.
அப்பேட்டியில் நலன் குமாரசாமி, “அடுத்ததாக நாயகியை முன்னிலைப்படுத்தி ‘சாமுண்டீஸ்வரி’...
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் கென் கருணாஸ். சில மாதங்களுக்கு முன்பு தானே இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பினைத் தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இப்படத்துக்கு ‘யூத்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திரையுலகினர் பலரும் கென் கருணாஸுக்கு வாழ்த்து...
‘மரகத நாணயம் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் 2-ம் பாகத்தின் பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்தும் முடிவாகி ‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக வீடியோவினை லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி வந்தார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
‘அருள்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சுகுமார்,...
வி.ஜே.பப்பு, அனுபமா, நாயகன், நாயகியாக நடித்துள்ள திரைப்படம், ‘மை டியர் டாலி’. ராஜவேலு உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை சிம்மமூர்த்தி சினிமாஸ் ஆர்.எம்.ஜெயராம சந்திரன் தயாரித்துள்ளார். பாசில் இசை அமைத்துள்ளார். பாலாஜி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை இயக்கியுள்ள ஏ.அரவிந்த் ராஜ் கூறும்போது, ” ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நாயகனும் நாயகியும் சில காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களுக்கு மாறி செல்கின்றனர்.
கதாநாயகி மீது நாயகனுக்கு ‘கிரஷ்’ இருக்கிறது. நாயகனுக்குப் பெண்பார்க்கும்...
அருண் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை முத்தையா இயக்கவுள்ளார்.
திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அருண் விஜய், “அடுத்து நாயகனாக முத்தையா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
‘ரெட்ட தல’ படத்தினைத் தொடர்ந்து ‘பார்டர்’ படமும் விரைவில் வெளியாகும். அதுவும் விரைவில் வெளியாகவுள்ளது” என்று...
விஜய்யின் ‘ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன.15) விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
தவெக தலைவரான நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இதற்கான தொடக்ககட்ட பணிகள் நடந்து வந்தன....
தமிழ் சினிமாவின் வரலாற்றில் தொண்ணூறுகளின் காலகட்டம் ஒரு முக்கிய திருப்புமுனை என்றே சொல்லலாம். டிஜிட்டல் யுகம் மெல்ல அறிமுகமாகிக் கொண்டிருந்த நேரத்தில், படச்சுருளில் தமிழ் சினிமா தன்னுடைய படங்களை எடுத்துக்கொண்டிருந்தது. என்றாலும் ‘ரெட்’, ‘அலெக்ஸா’ போன்ற புதிய வகை கேமராக்களும், கம்யூட்டரை இசையமைப்புக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியும், பன்னாட்டுத் திரைப்படங்களைக் காண்பதற்கு வழிவகை செய்த உலகமயமாக்கலின் தாக்கமும் என 90களின் சினிமா தமிழ் சினிமாவுக்கு ஏற்றம் தந்த 10...
ஜனவரி 2-ஆம் தேதி வெளியான இந்து டாக்கீஸ் பக்கத்தில் ‘தாக்கம் தந்த 10 படங்கள்’ என்கிற தலைப்பில், 2025-இன் குறிப்பிடத்தக்க மிடில் சினிமாக்களைக் கவனப்படுத்தியிருந்தோம். அந்தப் பட்டியலின் தொடர்ச்சியாக, 2025-இல் மேலும் பல ரசனையான முயற்சிகளை இந்து டாக்கீஸ் கவனப்படுத்த விரும்புகிறது. உள்ளடக்கம், உயர்வான காட்சியாக்கம், நல்ல நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்களோடு தூய பொழுதுபோக்குத் தன்மையிலும் சிறந்து விளங்கி ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட மேலும் பல படங்களில் முதலில்...
