சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம், உலகளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், மொழிப் போராட்டப் பின்னணியில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் ஓரிரு நாட்கள் தடுமாறினாலும் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூலை பெற்றது.
முதல் நாளில் உலகளவில் ரூ.27 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம், 11-வது நாளான இன்று இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளது. "உலகம்...
‘லாரா’ படத்தைத் தொடர்ந்து எம்.கே.ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் படம், ‘அறுவடை’. எம்.கார்த்திகேசன் இயக்கி, ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரவணன், ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகு ஸ்ரவண் குமார் இசை அமைத்துள்ளார்.
கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் இப்படக் குழுவினர், கோயம்புத்தூரில் பொங்கல்...
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ‘மை லார்ட்’. இதில் சைத்ரா ஜே. ஆச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
அம்பேத்குமார் வழங்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும் விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரகத் திருட்டு...
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்துள்ள இந்தித் திரைப்படம், ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இந்த ஸ்பை த்ரில்லர்’ படம், 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது. இப்படம் இதுவரை ரூ. 1,280 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ.879 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின்...
ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்து வரும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி புதிய படமொன்றை இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது மலேசியாவில் நடைபெற்ற தனது இசை நிகழ்ச்சியில், இப்படம் ‘மீசைய முறுக்கு 2’ என்று அறிவித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.
’மீசைய முறுக்கு 2’ குறித்து ஹிப் ஹாப்...
‘கைதி 2’ படத்தின் நிலை என்ன என்பது குறித்த கேள்விக்கு கார்த்தி பதிலளித்துள்ளார்.
கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில திரையரங்குகளுக்கு சென்று வருகிறார் கார்த்தி. அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, கார்த்தியிடம் அல்லு அர்ஜுன் படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் சென்றுவிட்டார். அப்படியென்றால் ’கைதி 2’ நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு கார்த்தி, “லோகேஷ் கனகராஜ்...
அப்போது சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தேன். கூடவே தொடர்ந்து வாய்ப்பு தேடுவதை வேலையாக வைத்திருந்தேன். ஆரம்பகால நடிகனுக்கு அதுவும் ஒரு வேலைதானே. என் மேல் அசோசியேட் இயக்குநர் ஒருவர் அக்கறை கொண்டவராக இருந்தார். அவர் எனக்கு அண்ணன் மாதிரி. அவர் எந்த படத்தில் பணியாற்றினாலும் என்னை அழைப்பார். வாய்ப்புகள் கிடைக்கும். அதை செய்து வந்தேன்.
அவர் முன்னணி இயக்குநர் ஒருவரின் படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது டப்பிங்கிற்கு...
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘மெஜந்தா’ ரொமான்டிக் காமெடி கதையாக உருவாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இதில் அஞ்சலி நாயர் நாயகியாக நடித்துள்ளார். அர்ச்சனா ரவிச்சந்திரன், ஆர்ஜே ஆனந்தி, படவா கோபி, சரத் ரவி, சவுந்தர்யா பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பரத் மோகன் இயக்கும் இந்தப் படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்குகின்றனர். தரண் குமார் இசை...
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இப்படம் சிறந்த வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் சென்சார் பிரச்சினையில் இருப்பதால் ‘தெறி’ படத்தைப் பொங்கலன்று மறு வெளியீடு செய்ய தயாரிப்பாளர் தாணு முடிவு செய்திருந்தார். இந்நிலையில் சில பிரச்சினைகள் காரணமாக அப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஜன.23-ம் தேதிக்கு மாற்றுவதாக அறிவித்திருந்தார்.
அதே தேதியில் ‘திரவுபதி 2’,...
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வசனம் மூலம் உருவான சர்ச்சைக்கு நடிகர் ஜீவா விளக்கமளித்துள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் ஒரு காட்சியில் “படிச்சு படிச்சு சொன்னேன்டா.. கண்டிஷன்ஸ் பாலோ பண்ணுங்கடா.. கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடானு.. கேட்டீங்களா” என்று வசனமொன்றை பேசியிருப்பார் ஜீவா. இந்தக் காட்சிக்கு திரையரங்கில் மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அதுவே இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஜீவா, “டிரெண்டிங்...
