ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், த்ரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய் – த்ரிஷா இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டனர்.
சமீபத்தில் விஜய்யின்...
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி ராஜ்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் படத்தின் இதர பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு...
சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அதன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார்.
அதில் சாய் அபயங்கர், “ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள்...
சினிமா என்பது 'செயல்' (ஆக்ஷன்) மற்றும் `எதிர்வினை' (ரியாக்ஷன்) ஆகிய 2 தூண்களால் ஆனது. ஒரு கதாபாத்திரம் பேசுவதைக் காட்டுவது, ஒரு தகவலைத் தருகிறது என்றால், அதைக் கேட்பவரின் முகத்தைக் காட்டுவது அந்தத் தகவலின் தாக்கத்தைத் தருகிறது. "ரியாக்ஷன் ஷாட்" என்பது தொழில்நுட்ப உத்தி என்பதோடு, அது ஒரு கதாபாத்திரத்தின் ஆன்மாவைத் திறந்து காட்டும் சாளரம்.
ரியாக்ஷன் ஷாட்டின் பரிணாமம்: சினிமாவின் ஆரம்ப காலங்களில், கேமரா மேடை நாடகத்தைப் பதிவு செய்யும்...
கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கொலைச்சேவல்’. இதில் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் என பலர் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசை அமைத்துள்ளார்.
ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன் இயக்கியுள்ளார். ஜவ்வாது மலைப் பின்னணியில் உருவாகியுள்ள காதல் படமான இது, சமுதாயத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தைப் பேசுகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படம்...
யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஸ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘வவ்வல்ஸ்; அன் அட்லஸ் ஆஃப் லவ்’.
5 கதைகளைக் கொண்ட இப்படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய 5 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். ராஜு ஷெரேகர் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 13-ல் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர்...
தமிழில், கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம், லப்பர் பந்து, மாமன் உள்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை சுவாசிகா. சமீபத்தில் அபுதாபி சென்றிருந்த இவர், பிப்.28-ம் தேதி கொச்சி திரும்புவதற்காக விமான டிக்கெட் முன் பதிவு செய்திருந்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகளுடன் சுவாசிகாவும் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை கொச்சி திரும்பிய அவர்...
‘முண்டாசுப்பட்டி’யில் நடிகராக அறிமுகமான முனீஷ்காந்த், இப்போது முக்கியமான குணச்சித்திர நடிகர். சமீபத்தில் வெளியாகி இருக்கிற ‘தாய் கிழவி’யில் அவர் கதாபாத்திரம் பேசப்பட்டிருக்கிறது. சினிமாவில் 12 ஆண்டுகளைக் கடந்திருக்கும் அவரிடம் பேசியதில் இருந்து...
Q
‘தாய் கிழவி’ல உங்க நடிப்பு பாராட்டப்பட்டு வருது...
A
‘முண்டாசுப்பட்டி’ மாதிரி, ‘தாய் கிழவி’ படமும் என் கேரியர்ல முக்கியமான படம். இதுல நடிச்சு முடிச்சுட்டு டப்பிங் பேசும்போதுதான், உடல் மொழி மட்டுமல்ல, டப்பிங்கும் ஒரு நடிப்புத்தான்னு புரிஞ்சுகிட்டேன். இந்தப்...
வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் தற்போது ‘போர்முழக்கம்’ என்ற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
லாலு மற்று டோனா தாமஸ் தயாரிக்கும் இப்படத்தினை பினில் இயக்கவுள்ளார். ‘போர்முழக்கம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் வக்கீலாக வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க...
‘கெணத்த காணோம்’ பட அறிமுக விழா – மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா குறித்து யோகி பாபு நெகிழ்ச்சி
admin - 0
இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் என்று ‘கெணத்த காணோம்’ நிகழ்ச்சியில் யோகி பாபு பேசினார்.
ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெணத்த காணோம்’. இப்படத்தினை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இதன் இறுதிகட்டப் பணிகளின் போது உடல்நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார். அவருடன் பணிபுரிந்தவர்கள் இறுதிகட்டப் பணிகளை முடித்து, இப்போது ‘கெணத்த காணோம்’ வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.
யோகி பாபு...










