Google search engine
இயக்குநர் சுதா கொங்கரா சூர்யா நடிப்பில் 'புறநானூறு' என்ற படத்தை இயக்க இருந்தார். இதில் விஜய் வர்மா, நஸ்ரியா, துல்கர் சல்மான் உட்பட பலர் நடிப்பதாக இருந்தது. அந்தப் படம் டிராப் ஆனதை அடுத்து அதே கதையை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்குத் தம்பியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் விலகிவிட்டார். அந்த கேரக்டரில் அதர்வா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில்,...
நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என்று மாளவிகா மோகனன் கூறினார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பாலிவுட்டுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடு இருப்பதைக் காண்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும், திரைக் கலைஞராக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழி, உணவு, போக் கூடிய அல்லது பேசக்கூடாத விதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நடிகர்கள், நவீன நாடோடிகளைப் போன்றவர்கள். ஒரு நாள் ஹைதராபாத் என்றால் அடுத்த...
ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் படத்துக்கு 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இதில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக இது உருவாகிறது....
‘இந்தியன் 3’ படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் படுதோல்வியை தழுவியது. அனிருத்தின் பின்னணி இசையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ’இந்தியன் 2’ படத்தின் முதலீட்டு அளவில்...
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய படம், ‘லப்பர் பந்து’. இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சுவாசிகா விஜய் கூறும்போது, “தமிழில் 6 வருடத்துக்கு முன் முதல் படம் பண்ணினேன். அப்போது பல...
நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜெயராம், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவின் 44-வது படமான இதன் படப்பிடிப்பு அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் ஊட்டியில் நடைபெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் பூஜா ஹெக்டே. இதற்காகப் படக்குழுவினர் கேக் வெட்டி...
சொத்துப் பிரச்சினையில் பூர்வீக வீடு சொந்தத்துக்குச் சென்று விட இதற்கு மேல் அங்கு வாழக் கூடாது என்று , தஞ்சாவூரின் நீடாமங்கலத்தில் இருந்து, தனது மனைவி, மகன் அருள்மொழி (அரவிந்த்சாமி) ஆகியோருடன் சென்னைக்கு இடம் பெயர்கிறார் அறிவுடை நம்பி (ஜெயப்பிரகாஷ்). இருபது வருடமாக ஊருக்குச் செல்லாமல் இருக்கும் அவர்களுக்குள் கோபம் இருந்தாலும் ஊர் பாசம் ஊறிக் கிடக்கிறது. இந்நிலையில் தன் மீது பாசம் கொண்ட சித்தப்பா மகள் புவனா...
நடிகை சிம்ரன், தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாயின. அதோடு அவருடைய கடைசிப் படமான விஜய் 69-ல் நடிக்க வாய்ப்புக் கேட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அதை மறுத்துள்ள சிம்ரன் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுவரை எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன். இப்போது என்...
சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் (ஏகன்), அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் (சத்யா) கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமி (யோகிபாபு) ஆதரவளிக்கிறார். பின் பெரியசாமியின் கோழிக் கடையில் பணியாற்றி தங்கையைக் கல்லூரியில் படிக்க வைக்கிறான்செல்லதுரை. அவரை, அருகில் பானைக்கடை வைத்திருக்கும் தாமரைச்செல்வி (பிரிகிடா சகா), காதலிக்கிறார். சூழ்நிலை காரணமாக அதை அவன் புறக்கணிக்கிறான். இந்நிலையில் தன் கல்லூரியில் அறிமுகமாகும் ஒருவருடன் தங்கைக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் செல்லதுரை வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்...
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் சினிமாவின் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நவ.1 முதல் புதிய விதிமுறைகளோடு படப்பிடிப்பைத் தொடங்குவது என்றும் இல்லை என்றால் சுமுக முடிவு எடுக்கும் வரை அனைத்து பணிகளையும் நிறுத்தி வைப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாகத் தொழிலாளர் சம்மேளனத்துக்கு அனுப்பிய மறு சீரமைப்பிற்கான விதிமுறைகள்...