குளச்சல்: கடற்கரையில் சூரிய அஸ்தமனம் காண குவிந்த மக்கள்
குளச்சல் கடற்கரையில் நேற்று ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்கள் சூரியன் மறையும் அழகை கண்டு களிக்க குவிந்தனர். குடும்பத்துடன் மணற்பரப்பில் அமர்ந்து உரையாடினர். அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடலுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. கடற்கரை பரப்பில் அமர்ந்து கடல் அழகை ரசித்து சென்றனர்.
திருவட்டார்: வெள்ளாங்கோடு சாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட பாரதப் பள்ளி மற்றும் வெள்ளாங்கோடு பகுதிகளை இணைக்கும் 15 ஆண்டுகளாக பழுதடைந்திருந்த சாலை, அமைச்சர் மனோ தங்கராஜ் ஜூன் மாதம் பணியைத் துவக்கி வைத்த நிலையில், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பெனி லா ரமேஷ் சாலையை திறந்து வைத்தார். இதனால்...
குமரி: உதவும் கரங்கள் சார்பில் நலத்திட்ட உதவி
செப்டம்பர் மாதத்திற்கான நல உதவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 'உதவும் கரங்கள் காஞ்சாம்புறம்' அமைப்பின் சார்பில் 79 குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 வீதம் வழங்கப்பட்டது. 'இயன்றவரை இயலாதவர்க்கு' என்ற நோக்கோடு, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இல்லங்களில் சென்று நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில்...
சாத்தன்கோடு: வாழை மரங்களை வெட்டி சாய்த்தவர் கைது
சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவரின் அடிதடி வழக்கில் சாட்சியாக உள்ள டென்னிஸ் (48) என்பவருக்கும், வில்சனுக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை, டென்னிஸ் வில்சனின் வாழைத்தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து வாழை மரங்களை வெட்டி சாய்த்தார். இதைத் தட்டிக் கேட்ட வில்சனின்...
நித்திரவிளை: திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கொத்தனார் சஜி, திருமண ஆகாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டில் இருந்த தென்னை மாத்திரையை மதுவில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். நண்பர்களால் மீட்கப்பட்டு குழித்துறை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்...
குமரி: கனிமொழி தலைமையில் தேர்தல் வியூகங்கள் விவாதம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில், தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்துகொண்டார். இக்கூட்டம்...
வடசேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (50) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் அது மாயமாகி இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மருங்கூரைச் சேர்ந்த கணேஷ் (27) என்பவரை கைது...
குளச்சல்: போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் ஒன்றாம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், இது குறித்து வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து...
சுங்கான்கடை: புனித சவேரியார் கத்தோலிக்க கல்லூரிக்கு விருது
தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதற்காக, சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில், மேங்கோபி நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்திய மூத்த கூட்டாண்மை மேலாளர் இந்த விருதை கல்லூரி தாளாளர்...
தக்கலையில் பைக் விபத்து: எஸ்ஐ உட்பட 3 பேர் படுகாயம்
நாகர்கோவிலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த கொற்றிக்கோடு போலீஸ் நிலைய எஸ்எஸ்ஐ தமிழ்செல்வன் (55), அவரது மனைவி அனி (48) மற்றும் கல்லூரி மாணவர் ஐசக் ரோஷன் ஆகியோர், தக்கலை அருகே கல்லூரி மாணவர் ஓட்டி வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில்...













