Google search engine

நாகர்கோவில் ராமன்புதூரில் புகையிலை விற்றவர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேசமணி போலீசார் நேற்று ராமன்புதூரில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கலைநகர் பகுதியைச் சேர்ந்த சுனில் (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்ததைக் கண்டறிந்தனர். அவரைப் பிடித்து விசாரித்ததில், அவரிடமிருந்து 25 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், சுனிலை போலீசார்...

இரணியல்: நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் மீது வழக்கு

இரணியல் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் மது பார்-ஐ மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஊர்வலமாக வந்த கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நேற்று 60 பேர்...

திருவட்டாறு: வாள் விளையாட்டுப் பயிற்சியாளருக்கு வெட்டு

ஆற்றூரில் நடந்த மாநில வாள்வீச்சுப் போட்டியில், பயிற்சி மைய உரிமையாளர் செல்வகுமாருக்கும், ஜிஷோ நிதி தலைமையிலான அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் செல்வகுமாருக்கு வெட்டுக்காயம் விழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் திருவட்டாறு போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்த்தாண்டம்: இந்து இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்.. 150 பேர் கைது

உண்ணாமலைகடை பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து கடந்த 15ஆம் தேதி தாசில்தார் மற்றும் போலீசார் கோவில் சிலை மற்றும் சிவலிங்கத்தை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் மார்த்தாண்ட காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று இந்து அமைப்புகள் சார்பில் உண்ணாமலை கடை சந்திப்பில்...

தேங்காபட்டணம்: கடலில் மிதந்த சடலம்; வீடியோ வைரல்

குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தேங்காப்பட்டணம் துறைமுக கடற்கரையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் மனித உடல் ஒன்று இன்று 30-ம் தேதி கரை நோக்கி மிதந்து வந்தது. இனயம் கடற்கரை மீன் பிடி தொழிலாளர்கள் இதனைக் கண்டு வாட்ஸ்அப் குழுமங்களில் தகவல் தெரிவித்தனர். இந்த...

அதங்கோடு: 4 வழி சாலை இணைப்பு பணியை எம். எல். ஏ துவக்கினார்

கிள்ளியூர் தொகுதி, அதங்கோடு பகுதியில் கோயிக்கதறை முதல் மடத்துவிளை வரை 4 வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க அப்பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். தேசிய நெடுஞ்சாலையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, இணைப்பு சாலை அமைக்க அனுமதித்தனர். இந்த...

குமரி: காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

நாகர்கோவில் ஒழுகினசேரி கலைவாணர் தெருவைச் சேர்ந்த சதீஷ் ராஜன் (23) என்பவர், கடன் பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பிரியா (22) கண்விழித்துப் பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உறவினர்கள் உதவியுடன் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக்...

இரணியல்: பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்கள் கைது

ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வீடு திரும்பிய கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சேசம்மாள்(75) என்பவரின் கழுத்தில் இருந்த சுமார் 3 பவுன் தங்க செயின் மாயமானது. பேருந்து வில்லுக்குறி பாலம் அருகே வந்தபோது, மூதாட்டி சத்தம் போட, பேருந்தில் இருந்து இறங்கிய 2 பெண்களை பிடித்து...

தக்கல: நாற்காலியில் சிக்கிய குழந்தை; மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தக்கலை அருகே குழித்தோடு பகுதியில் நேற்று (அக்.28) ஒரு குழந்தையின் கால் பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது. சமையல் செய்து கொண்டிருந்த தாய் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலின் பேரில், தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு...

கோதையாறு: மீண்டும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கோதையாறில் யானைகளால் வீடுகள் சேதமடைந்து தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது பருவமழை பெய்து வரும்போது ஒற்றை யானை ஒன்று ரப்பர் தோட்டங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. வனத்துறையினர்...