Google search engine

புதுக்கடை: படகிலிருந்து விழுந்து மீன் தொழிலாளி பலி

தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் தொழில் செய்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மனு (38) என்பவர், கடந்த 7ம் தேதி மீன்பிடித்து விட்டு படகை பரக்காணி ஆற்றில் நிறுத்தினார். நேற்று முன்தினம் மதியம் படகில் காணாமல் போன மனு, நேற்று தண்ணீரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். புதுக்கடை...

நெல்லை, குமரி: தீவிரமடையும் கனமழை.. வெளியான அறிவிப்பு

16ம் தேதி முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது....

கன்னியாகுமரி: மது போதையில் ஓட்டிய டிரைவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஓட்டுநருக்கு ரூ. 15...

நாகர்கோவில்: விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் இந்த கஞ்சா, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பார்சலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தலில்...

குமரி: திட்டிய மாமியார்.. மருமகள் விபரீத முடிவு

குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) என்பவரின் மனைவி லேகா (32), கணவர் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று மாமியார் திட்டியதால் மனமுடைந்த லேகா, வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக...

குமரி: ஆசிய தடகள போட்டி – எஸ்ஐக்கு 2 பதக்கங்கள்

சென்னையில் நடைபெற்று வரும் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம், 2026 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெறும் உலக மாஸ்டர்ஸ் தடகள...

தக்கலை: திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

தக்கலை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரகுநாத் வீட்டில் கடந்த மாதம் 18ஆம் தேதி 29 பவுன் நகைகள் மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது. தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏற்கனவே 4 பேரை கைது செய்த நிலையில், திருட்டில்...

திருவட்டார்: லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

நேற்று இரவு 8.30 மணியளவில் ஆற்றூர் - சிதறால் சாலையில் பைக்கில் சென்ற வெல்டிங் தொழிலாளி ஸ்டாலின் (35) பருத்திவிளை பகுதியில் சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில், எதிரே வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டாலின் உயிரிழந்தார். திருவட்டார் போலீசார்...

ஆரல்வாய்மொழி: பைக்கில் சத்தம்; இளைஞர்கள் மீது தாக்குதல்

ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் பைக்கில் அதிக சத்தம் எழுப்பியதாக கேட்டதால், ராபின்சன் மற்றும் மெல்வின் ஆகியோர் புஷ்பராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை தாக்கி, கையில் இருந்த சாவியால் தலையில் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புஷ்பராஜ் அளித்த...

குமரி: சிறுமிக்கு பாலியல்; 5 ஆண்டுகள் சிறை

விரிகோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர் நேசமணி (62), 2020 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மாவட்ட போக்சோ நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு...